முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள்..! ஆளுநர் ரவி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Political party leaders wish Chief Minister M K Stalin on his birthday

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  தமிழக ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர்  திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தந்தையை மிஞ்சிய மகன்.. மாற்றுத் திறனாளிகள் & திருநங்கைக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

 

அண்ணாமலை வாழ்த்து

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

 

சிகரங்களை நோக்கி

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டு முதலமைச்சரின் 70ஆம் பிறந்தநாளை முன்னிட்டு அவரை முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன்.நீண்டகாலம் வாழவேண்டும்; வாழும்வரை ஆளவேண்டும் என்று வாழ்த்தினேன். பொன்னாடை பூட்டி
நான் எழுதிய புத்தகம் கொடுத்தேன்.தலைப்பைப் பார்த்ததும் சில்லென்று சிரித்தார். "சிகரங்களை நோக்கி"

 


இந்தியாவின் முதன்மை முதல்வர்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 70 -வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நன்னாளில் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகர மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று நிர்வாக பணிகளை சீரும், சிறப்புமாக மேற்கொண்டு வரும் தாங்கள்,

Political party leaders wish Chief Minister M K Stalin on his birthday

இந்தியாவின் தலைசிறந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றம் அடையச் செய்ய எடுக்கும் முயற்சிகள் வெற்றி காண வாழ்த்துகிறேன்.மேலும், வாழ்வின் அனைத்து வளமும், நலமும் பெற்று, நீண்ட ஆயுளோடும், பூரண ஆரோக்கியத்துடனும் தாங்கள் நீடுடி வாழ நல்வாழ்த்துகளை பகிர்கிறேன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி இருக்காது- திருமாவளவன் அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios