PMK Anbumani Ramadoss : இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

மத்திய அரசு - தடை

நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு, தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்யும் பொருட்டு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும்தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கு தண்டனை வழங்குவது குறித்தும் அதில் வரையறுக்கப்பட்டுள்ளது. 

அன்புமணி ராமதாஸ்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், 'சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது சமூகத் தீமைகளைத் தடுக்கும். மது மற்றும் புகையிலைப் பழக்கங்களிலிருந்து மீண்டு வாழ நினைப்போரையும், சிறுவர்களையும் மது மற்றும் புகையிலைப் பழக்கங்களை நோக்கி இந்த மறைமுக விளம்பரங்கள் இழுக்கின்றன. மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் அதிகரிப்பதற்கு இத்தகைய மறைமுக விளம்பரங்கள் தான் காரணம். 

Scroll to load tweet…

மது மற்றும் புகையிலை தொடர்பான மறைமுக விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர்ந்து போராடி வருகின்றன. இப்போது மறைமுக விளம்பரங்கள் தடை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திடல்களில் வைக்கப்படும் மது மற்றும் புகையிலை சார்ந்த மறைமுக விளம்பரங்கள், நேரடி ஒளிபரப்பின் மூலம் கோடிக்கணக்கானோரை சென்றடைந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Ration Shop : குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! இனி கவலையில்லை மக்களே !!

இதையும் படிங்க : Vijay : நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லணும் ! ஆதீன விவகாரத்தில் கருத்து சொன்ன அர்ஜுன் சம்பத்