Ration Shop : குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! இனி கவலையில்லை மக்களே !!

Ration Shop : தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. 

TN Ration shop employees accepted the promise given by Minister Periyasamy and temporarily abandoned the protest

ரேஷன் கடை

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப் படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது.  தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. 

TN Ration shop employees accepted the promise given by Minister Periyasamy and temporarily abandoned the protest

இதனால் வரும் 13ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில் அரசுடன் நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தையின் போது 1 வார காலத்திற்குள் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை உத்தரவாதம் அளித்தது. இதனையடுத்து தங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இன்னும் 1 வாரதிற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

TN Ration shop employees accepted the promise given by Minister Periyasamy and temporarily abandoned the protest

ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

இதையும் படிங்க : Vijay : நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லணும் ! ஆதீன விவகாரத்தில் கருத்து சொன்ன அர்ஜுன் சம்பத்

இதையும் படிங்க : "ஆதீனத்தை தொட்டு பாருங்க.. திமுகவில் ஒருத்தர் கூட இருக்கமாட்டீங்க !" திமுகவுக்கு சவால் விடும் எச்.ராஜா !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios