"ஆதீனத்தை தொட்டு பாருங்க.. திமுகவில் ஒருத்தர் கூட இருக்கமாட்டீங்க !" திமுகவுக்கு சவால் விடும் எச்.ராஜா !
H Raja : கோவில்களில் இருந்து அரசை விரட்டியடிக்க ஆதீனம் தலைமையில் ஒன்று சேர்வோம். தமிழக மக்கள் வீதியில் வந்து நின்று திராவிட முன்னேற்றக் கழக அரசை தூக்கி எறிவார்கள. அந்த நிலை விரைவில் வரும்.
பாஜக சாதனை பொதுக்கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியுன் சார்பாக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், இரு சக்கர வாகன பேரணி போன்றவை நடைபெற்று வருகிறது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாவட்டந்தோறும் நடக்கும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது ஒருபக்கம் இருக்க, மற்ற மூத்த தலைவர்களும் தமிழகம் முழுக்க சுற்றுபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.ராஜா பேச்சு
அந்த வகையில் தேனியில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ' தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை அடித்த கொள்ளை 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். 2 ஜி அலைக்கற்றை ஊழல் எல்லாம் அருகில் நிற்க முடியாது. மதுரையில் மாநாடு நடந்தது. மதுரை ஆதீனம் பற்றுள்ள நல்ல மனிதர். அவரை மிரட்டுகிறார்கள்.
மதுரை ஆதீனம்
ஆழ்வார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் உருவாக்கப்பட்ட பீடாதிபதியை மிரட்டுவீர்களா ? அவரைத் தொட்டால் திமுகவில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். எல்லோரும் பிஜேபிக்கு வந்துவிடுவார்கள். கோவில்களில் இருந்து அரசை விரட்டியடிக்க ஆதீனம் தலைமையில் ஒன்று சேர்வோம். தமிழக மக்கள் வீதியில் வந்து நின்று திராவிட முன்னேற்றக் கழக அரசை தூக்கி எறிவார்கள. அந்த நிலை விரைவில் வரும். தமிழை வளர்க்க நமக்கு திமுக தேவை இல்லை. தமிழ் விரோத கட்சி அது.
நமது தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன ஈவேராவின் வழிவந்த கூட்டத்தை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டும். திமுகவிற்கு ஒரு பழக்கம் உண்டு. நடக்கப் போற விஷயத்தை முன்னாடியே சொல்லி வைத்து விடுவார்கள். என்றால் அதை நாங்கள் சொன்னதால் தான் நடந்தது என்று கூறுவதற்காக. அதுதான் கச்சத்தீவு குறித்த முதல்வரின் பேச்சும். திமுக தமிழ் விரோதி தமிழன் விரோதி தமிழக விரோதி. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் 2031 இல் தமிழகத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள்.இது மிக முக்கியமான விஷயம் ஆகும்.
திமுக ஆட்சி
நீட் தேர்வு அமலுக்கு வந்ததற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணம். உண்மையிலேயே தமிழக முதல்வருக்கு நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர் நீதிமன்றத்தின் கதவை தட்டி இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீட் வேண்டும் என்று வாதம் செய்தது சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம். நளினி சிதம்பரம் வீட்டிற்கு முன் சென்று முதல்வர் எதிர்ப்பை தெரிவிக்கலாம். அதில் நியாயம் உண்டு. அதை விட்டுவிட்டு தமிழக முதல்வர் பிரதமர் மேடையில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்’ என்று கூட்டத்தில் பேசினார்.
இதையும் படிங்க : "இனி ஜி ஸ்கொயர் முத்துசாமி தான்.. பழைய சேகர்பாபுவை காட்டுங்க பார்க்கலாம்" மார்தட்டும் அண்ணாமலை !
இதையும் படிங்க : DMK: திராவிட மாடல் போய்.. காட்டுமிராண்டி மாடல் ஆகிவிடும் - எச்சரிக்கும் டிடிவி தினகரன் !!