ஆளுநர் தான் பொறுப்பு.. திமுக 1,000 தரவில்லை? 2024 கூட்டணி யாருடன்? சஸ்பென்ஸை உடைத்த அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் போட்டியாக இருக்கும் ஒரு பிரச்சினையாக ஆன்லைன் ரம்மி உள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டு மூலம் தமிழ்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து செய்து கொண்டுள்ளார்கள். - அன்புமணி ராமதாஸ்.

Pmk president anbumani ramadoss open up 2024 elction alliance

மதுரை விமான நிலையத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  பொதுவாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத மாவட்டங்களாக உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெற்றால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்.  எய்ம்ஸ் மருத்துவமனை 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ஜப்பான் ஜெய்கா நிறுவன நிதி உதவியுடன் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது ஆனால் இன்று வரை ஜெய்கா நிறுவனத்தில் நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. அதனால் மத்திய அரசு அதற்கான நிதியை மதுரை எய்ம்ஸ்க்கு ஒதுக்கீடு செய்து மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும்.

Pmk president anbumani ramadoss open up 2024 elction alliance

இதையும் படிங்க..Pudukkottai : நீங்களா ஏன் இங்க குளிக்கிறீங்க.? புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை.. மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

மதுரையோடு அறிவிக்கப்பட்ட நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது பணியை தொடங்கி இருக்கிறது. ஆனால் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணி தொடங்கப்படாமல் உள்ளது. 2008 - 2009 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் அது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அறிவிக்கப்ட்டுள்ளது.

எனவே பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றார். மதுரை நகரத்திற்கு ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளை உருவாக்கி மழை நீரை சேமிக்கும் வழி வகை செய்ய வேண்டும். இதேபோல் காவிரி, தாமிரபரணி, நம்பியாறு சீரமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு நின்று போய் உள்ளது அதையும் விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் போட்டியாக இருக்கும் ஒரு பிரச்சினையாக ஆன்லைன் ரம்மி உள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டு மூலம் தமிழ்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து செய்து கொண்டுள்ளார்கள். இதனை தடுக்க வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் பாமக போராட்டம் நடத்தியதால், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தார்.

இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

Pmk president anbumani ramadoss open up 2024 elction alliance

தற்போது திமுக அரசிடமும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய பலமுறை கோரிக்கை விடுத்து திமுக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கையெழுத்திட ஆளுநரிடம் அனுப்பப்பட்டும் ஆளுநர் மறுப்பது ஏன் என்று புரியவில்லை. ஆளுநர் ஏன் கையெழுத்திட மறுக்கிறார் என்று தெரியவில்லை. தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றியதற்கு பின்பு பத்துக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தமிழக ஆளுநரே பொறுப்பு. தமிழகத்தில் கஞ்சா, அபின்உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை வேகமாக வளர்ந்து வருகிறது அதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரை சந்தித்து பலமுறை நேரில் வலியுறுத்தி உள்ளேன். இதற்கு முதல்வர் மாதந்தோறும் போதை பொருள் தடுப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்ப்பவர்களை பிடிப்பதை விட சப்ளை செய்பவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் நோக்கம். திமுக, அதிமுக இரண்டு ஆட்சி காலத்திலுமே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற எண்ணத்தில் மக்கள் வந்து விட்டார்கள். அதிமுக, திமுகவை தவிர்த்து மாற்றுக் கட்சியை மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் எண்ணத்தை பாமக நிறைவேற்றும்.

இப்போது தேர்தல் கூட்டணி என்பது அவசியம் இல்லை. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும். நீர் மேலாண்மையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய நோக்கம். வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றார்கள். திமுக அரசு செய்ததா பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை இவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குள் ஆட்சியே முடிந்துவிடும் என்று பதில் கூறினார்.

இதையும் படிங்க..Chidambaram : ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios