Asianet News TamilAsianet News Tamil

Chidambaram : ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்

கொள்ளையடித்தால் தான் நமது கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்க முடியும். அப்போ என்னை கொள்ளை அடிக்க சொல்கிறீர்களா தவறு செய்யச் சொல்கிறீர்களா ? - ப.சிதம்பரம் பேச்சு.

we want to be like DMK we have to loot Congress P.Chidambaram controversy speech
Author
First Published Jan 2, 2023, 8:14 PM IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காங்கிரஸ் அலுவலகத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் பேசிய ப. சிதம்பரம், மானாமதுரை வட்டாரத்தில் வாக்குச் சாவடிகளை சீரமைக்க வேண்டும். அதற்கு குழு அமைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். அப்போது, நகரத் தலைவா் எம். கணேசன் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், மானாமதுரையில் வந்து கட்சிக் கொடியை ஏற்றினாா்.

we want to be like DMK we have to loot Congress P.Chidambaram controversy speech

இதையும் படிங்க..இடம் மாற போகும் திருப்பதி கோவில்.. 70 லட்சம் வீட்டை கோவிலுக்கு எழுதிக்கொடுத்த தமிழ்நாட்டு பெண் !!

ஆனால், கட்சி நிா்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை எனப் புகாா் தெரிவித்தாா்.  இதுதொடா்பாக ப. சிதம்பரம் விசாரித்துக் கொண்டிருந்த போது, கட்சியைச் சோந்த இளைஞா் ஒருவா், மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினா் இரு பிரிவாக கொடியேற்று விழா நடத்துகின்றனா். கட்சி அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதில்லை என்றாா்.

அப்போது, கட்சியினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  ப. சிதம்பரம் கட்சியினா் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவா்களை அமைதிப்படுத்தினார்.  அப்போது எழுந்து பேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், கடந்த தீபாவளியை முன்னிட்டு திமுகவில் 27 வார்டுகளிலும் திமுக நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல நமது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு 100 ரூபாய் கூட கொடுக்க கூடாதா ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம், கொள்ளையடித்தால் தான் நமது கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்க முடியும். அப்போ என்னை கொள்ளை அடிக்க சொல்கிறீர்களா தவறு செய்யச் சொல்கிறீர்களா என்றும் எம்பி நிதியில் இருந்து காண்டிராக்ட் எடுத்து அதில் 10 சதவீதம் கமிஷன் வாங்கி கொடுக்க சொல்கிறீர்களா ? என்று கூறினார்.

we want to be like DMK we have to loot Congress P.Chidambaram controversy speech

இதையும் படிங்க..Swiggy : புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்

இதையடுத்துப் பேசிய அக்கட்சித் தொண்டா்கள், காா்த்தி சிதம்பரம் நன்றி சொல்ல தொகுதிக்கு வரவில்லை, கட்சியினரை ஊக்கப்படுத்தவில்லை என்றனா். கொரோனா காலம் என்பதால்தான் காா்த்தி சிதம்பரம் வரவில்லை என சிதம்பரம் பதிலளித்தாா்.

பின்னா், செய்தியாளா்களின் கைப்பேசிகளை வாங்கி பதிவுகளை அழிக்குமாறு ப. சிதம்பரம் கூறினாா்.  இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினா் செய்தியாளா்களின் கைப்பேசிகளைத் தருமாறு வற்புறுத்தினா். ஆனால், செய்தியாளா்கள் தர மறுத்து கூட்டத்தை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க..ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios