இது இந்திய நாடா ? ஹிந்தி நாடா ? ஹிந்தி திணிப்புக்கு எதிராக பொங்கி எழுந்த ராமதாஸ்.!!

இந்தித் திணிப்பைப் பார்க்கும் போது இது இந்திய நாடா.... அல்லது .... ஹிந்திய நாடா?  என்ற ஐயம் தான் எழுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு  வலு சேர்க்காது என்று கூறியுள்ளார் பாமக  நிறுவனர் ராமதாஸ்.

Pmk founder ramadoss tweet about hindi imposition issue

இந்நிலையில் பாமக  நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிளம்பர் உள்ளிட்ட ’சி’ பிரிவு பணிகளுக்கு கூட இந்தியில்  தான் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுகின்றன. அதனால், 95% வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு கிடைக்காமல் வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 

Pmk founder ramadoss tweet about hindi imposition issue

அந்த ஊர் மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்  என்பது தான் நடைமுறையாகும். அது தான் நியாயமும், இயற்கை நீதியும் கூட! ஆனால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்க வேண்டும் என்பதற்காகவே கல்பாக்கத்தில் இந்தியில் தேர்வு நடத்தப்படுவதாகத் தோன்றுகிறது.  இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என 1978-ல் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு எதிரானது ஆகும். 

Pmk founder ramadoss tweet about hindi imposition issue

கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுவை ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள்  மேற்கொள்ளும் இந்தித் திணிப்பைப் பார்க்கும் போது இது இந்திய நாடா.... அல்லது .... ஹிந்திய நாடா?  என்ற ஐயம் தான் எழுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு  வலு சேர்க்காது. தச்சர், பிளம்பர் போன்ற பணிகளுக்கு திறனும்,பயிற்சியும் தான் முக்கியம். மொழி அல்ல.எல்லாமே இந்தியில் தான் என்பது ஏகாதிபத்திய மனநிலை. அதை விடுத்து  சி, டி பிரிவு பணிகளுக்கு தமிழில் தேர்வு நடத்தவும், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் கல்பாக்கம் அணுமின் நிலையம் முன்வர வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Asani : தீவிரமானது அசானி புயல்.. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

இதையும் படிங்க : வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி.. மகிழ்ச்சி செய்தி சொன்ன வனத்துறை !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios