பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் மீதான வழக்கை ரத்து செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமகவினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், இருவரும் விபத்து காரணமாக உயிரிழந்ததாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை முதற்கட்ட வழக்குப்பதிவு செய்தது. 

இதையும் படிங்க;- திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து... மு.க.ஸ்டாலின் திடீர் அறிவிப்பு..!

பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக, காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது. இதற்கு விழுப்புரம் காவல்துறை அனுமதி தர மறுத்தது. ஆனால், தடையை மீறி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய இரவு ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் கட்டிலில் வெறி தீர உல்லாசம்... நேரில் பார்த்ததால் பெற்ற மகனுக்கு தாய் கொடுத்த பரிசு..!

இந்நிலையில், சட்ட விதிகள் படி காலம் கடந்த இந்த நடவடிக்கை செல்லாது என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.