Asianet News TamilAsianet News Tamil

இனி பிரதமர் மோடி பேசுவதை தமிழிலேயே கேட்கலாம்.. AI உதவியுடன் புதிய வசதியை அறிமுகம் செய்த பாஜக..

நரேந்திர மோடி தமிழ் என்ற எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியின் உரை செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தமிழாக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. 

Pm modi in tamilnadu Bjp using AI technology to breach language barriers know how Rya
Author
First Published Mar 15, 2024, 2:25 PM IST

நாடே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த மக்களவை தேதி தொடர்பான அறிவிப்பை நாளை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக தீவிர முனைப்பில் உள்ளது. அதே நேரம் இந்த தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திருப்பூர். சென்னை, நெல்லை, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். அந்த வகையில் தற்போது மீண்டும் தமிழ்நாடு வந்துள்ள மோடி, கன்னியாகுமரியில் நடந்த பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.

திமுக அரக்கனாக உள்ளது... தேர்தலில் தோற்கடித்து தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்போம் - மோடி உறுதி

அப்போது பேசிய அவர் “ நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து அலை வீசுகிறது. இந்த அலை நீண்ட தூரம் பயணிக்கும். தமிழகத்தில் குடும்ப ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் இலக்கு. இந்தியா கூட்டணி 2ஜி ஊழல் செய்துள்ளது. பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டு வந்துள்ளோம். இந்தியா கூட்டணி இந்த தேர்தலில் அகற்றப்படும்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி “ உங்கள் அன்புக்கு நான் என்ன திரும்ப தரப்போகிறேன் என்பது தெரியவில்லை. என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று கவலையாக உள்ளது. நமோ ஆப் மூலம் உங்களிடம்  நான் தமிழில் பேசப்போகிறேன். இதுகுறித்து அண்ணாமலை விளக்கம் அளிப்பார் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ எக்ஸ் தளத்தில் நமோ இன் தமிழ் என்ற பக்கம் இருக்கிறது. பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பேசி முடித்த பிறகு பிரதமரின் உரையை செயற்கை நுண்ணறிவின் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்படும். மோடி அவர்கள் எந்த உணர்வில் பேசுகிறாரோ அதே உணர்வில் கிட்டத்தட்ட வீடியோ பதிவேற்றப்படும். 

மக்களவை தேர்தல் நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்; தேர்தல் விதிகள் உடனடியாக அமலுக்கு வரும்!!

அனைத்து சமூக வலைதள பக்கங்கள் மூலம் பிரதமர் பேசும் வீடியோவை கொண்டு செல்வதே நாம் செய்ய வேண்டிய வேலை. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் பிரதமர் மோடி பேசும் முக்கியமான விஷயங்களையும் செயற்கை நுண்ணறிவு மூலம் மொழிபெயர்த்து வீடியோ வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி நான் பேசும் வீடியோவை கேட்பீர்களா என்று கேட்டார்.. கேட்பீர்கள் என்றால் செல்போன்களை உயர்த்தி டார்ச் லைட்டை ஆன் செய்து காட்டுங்கள் என்று கூறினார். அப்போது அனைவரும் தங்கள் செல்போன்களை உயர்த்தி டார்ச் லைட்டை ஆன் செய்து காட்டினர்.

நரேந்திர மோடி தமிழ் என்ற எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியின் உரை செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தமிழாக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios