திமுக அரக்கனாக உள்ளது... தேர்தலில் தோற்கடித்து தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்போம் - மோடி உறுதி

 ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி தமிழகத்தின் எந்த பெருமைக்குரிய பாரம்பரியமிக்க ஒரு சிறப்பு அம்சமாக இருந்தாலும் சரி மோடி இருக்கும் வரை அதை யாரும் அசைக்க முடியாத அந்த பெருமையை காப்பாற்றுவேன் என மோடி தெரிவித்தார். 

Modi said that he will defeat the DMK and form the BJP government in Tamil Nadu KAK

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாஜக சார்பாக நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வருகிறார். அந்த வகையில் இன்று தமிழகத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மத்தியில்  காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்திற்கு எந்த வித திட்டங்களும் செயல்படுத்தவில்லையென விமர்சனம் செய்தார். குறிப்பாக கன்னியாகுமரி மக்கள் ரயில் திட்டங்களுக்கு கோரிக்கை விடுத்தனர் ஆனால் அதையும் நிறைவிற்றவில்லை. பாஜக அரசு வந்த பிறகு தான் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டதாக கூறினார். 

 

ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும் ஒரு மிகப்பெரிய ஒரு ஒருங்கிணைப்பை, ஒரு இணை செயல்பாட்டை நாம் வந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த10 ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்து விட்டன.  சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால்  2009 - 2014 ஆம் ஆண்டுக்கான காலகட்டத்தில் காங்கிரஸ் திமுக ஆட்சி தமிழகத்தின் ரயில்வே பணிகளுக்காக கொடுக்கப்பட்ட பணம் திட்ட மதிப்பீடு ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் பாஜக அரசு ரயில்வே கட்டமைப்பிற்காக ஆண்டிற்கு கொடுத்த பணம் கொடுக்கப்பட்ட பணம் 6300 கோடி ரூபாய் என தெரிவித்தார். 

 

Modi said that he will defeat the DMK and form the BJP government in Tamil Nadu KAK

 திமுக தமிழ்நாட்டின் தமிழ் பண்பாட்டின் எதிரி, சாதாரண எதிரி அல்ல, மூர்க்கதனமான எதிரி என விமர்சித்தார். நம்ம பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்கின்ற எதிரிப்பதாகவும் கூறினார்.  அயோத்தில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை கூட பார்க்கவிடாமல் திமுக அரசு தடுத்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. நமது கலாச்சாரத்தின் மீது  ஆரம்பத்தில் இருந்து திமுக வெறுப்பினை காட்டிக்கொண்டு இருக்கிறது என குற்றம்சாட்டினார். 

 

 தமிழகத்தின் அடையாளத்தை பெருமையை பாதுகாக்க பாரதிய ஜனதா கட்சி என்றும் முன்னணியில் இருக்கிறது.  அவங்களுடைய தூற்றல்களையும் அவங்களுடைய எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பொறுப்பெடுத்தவில்லையென கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்த பிறகு திமுக- காங்கிரஸ் அரசு மவுனம் காத்தது.  ஜல்லிக்கட்டு தடை செய்து நம்ம கலாச்சாரத்தை அந்த பாரம்பரிய விளையாட்டை அழிக்க நினைத்தார்கள்.  

Modi said that he will defeat the DMK and form the BJP government in Tamil Nadu KAK

ஜல்லிக்கட்டு தமிழகம் மீண்டும் கொண்டாட ஏற்பாடுகளை செய்தது பாஜக அரசு,  ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி தமிழகத்தின் எந்த பெருமைக்குரிய பாரம்பரியமிக்க ஒரு சிறப்பு அம்சமாக இருந்தாலும் சரி மோடி இருக்கும் வரை அதை யாரும் அசைக்க முடியாத அந்த பெருமையை காப்பாற்றுவேன் என கூறினார். மேலும்  புதிய பாராளுமன்றம் கட்டி அங்கே ஒரு செங்கோல் நிறுவப்பட்டது.  தமிழரின் பெருமை, தமிழ் மன்னர்களின் பெருமை, தமிழ் மக்களின் பெருமை, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எப்பவுமே சொல்ற மாதிரி நிறுவப்பட்ட அந்த செங்கோல் திமுக புறக்கணித்ததாக மோடி தெரிவித்தார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios