Asianet News TamilAsianet News Tamil

அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள ஓ.பி.எஸ்… பாதுகாப்பு வழங்கக்கோரி மனு!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார்.

petition to provide security while ops going to admk head office
Author
First Published Sep 8, 2022, 7:23 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் பூதகரமாகியுள்ளது. மேலும் ஒற்றை தலைமை  விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, இருவரும் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிங்க: இபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.. தலையில் அடித்துக் கதறும் பெங்களூரு புகழேந்தி.

இந்த வழக்கில் ஆக.17 ஆம் தேதி, வழக்ககை விசாரித்த தனி நீதிபதி, 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பின்படி ஓபிஎஸ்-ன் ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்தாகவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்வதால் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் சென்று பணியாற்ற எந்த தடையும் இல்லை.

இதையும் படிங்க: பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர் ஓபிஎஸ்...! இறங்கி அடிக்கும் இபிஎஸ்

அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செல்லும்போது அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் கூடும் வாய்ப்புள்ளது. ஏராளமான தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தில் கூடுவதை பயன்படுத்தி சமூக விரோதிகள் கலவரம் செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.சி.டி.பிரபாகர், அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஓபிஎஸ் மனம் வருந்தும் படி இபிஎஸ் பேசுவதை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios