Asianet News TamilAsianet News Tamil

இபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.. தலையில் அடித்துக் கதறும் பெங்களூரு புகழேந்தி.

அதிமுக தலைமைக் கழக விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்திற்குச் செல்வது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பெங்களூரு புகழேந்தி விமர்சித்துள்ளார்.


 

Going to EPS AIADMK office is an act of insulting the court. Bangalore Pugazhendi
Author
First Published Sep 8, 2022, 3:44 PM IST

அதிமுக தலைமைக் கழக விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்திற்குச் செல்வது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பெங்களூரு புகழேந்தி விமர்சித்துள்ளார்.

அதிமுகவுக்கு தலைமையேற்கும் விவகாரத்தில்  ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகியும்,  ஓபிஎஸ் ஆதரவாளருமான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு:-

Going to EPS AIADMK office is an act of insulting the court. Bangalore Pugazhendi

இதையும் படியுங்கள்: சவுக்கு சங்கரால 15 கோடி போச்சி... கோர்ட்டில் கதறிய ஜி ஸ்கொயர்.. அவதூறு பேச தடை விதித்த நீதிமன்றம்.

அதிமுகவுக்கு தலைமை யார் என்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, பொதுக்குழு குறித்த இரண்டு நீதிபதிகள் அளித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார், இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் செல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். ஏற்கனவே அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் ஆனால் 30 நாட்கள் வரை அலுவலகத்தில் நுழையக் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்.

இதையும் படியுங்கள்: புற்கள் மண்டி கேட்பாரற்று கிடக்கும் ஜெயலலிதா சிலை ...! செவிசாய்க்காத திமுக...! ஓபிஎஸ் ஆவேசம்

47 நாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு செல்ல நினைப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஏற்கனவே அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து, சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சி.வி சண்முகத்திற்கு அதிமுக அலுவலகத்தில் என்ன வேலை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஏன் அவர்களை போலீசார் அலுவலகத்திற்குள்ளே அனுமதிக்கின்றனர் என்றும் புகழேந்தி கேள்வி எழுப்பினார். 

Going to EPS AIADMK office is an act of insulting the court. Bangalore Pugazhendi

அதிமுக அலுவலகத்தில் நுழைந்து உள்ளேயுள்ள தடயங்களை அழித்து மீண்டும் ஒரு கலவரத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிடுகின்றனர் என்றும் புகழேந்தி குற்றம்சாட்டினார். தமிழக காவல்துறை தலைவர், சிபிசிஐடி போலீஸாரை மிகவும் கேவலமாக பேசிய சி.வி சண்முகத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பான விசாரணைகள் நடந்து முடியும்வரை அதிமுக அலுவலகத்திற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றார்.

இது தொடர்பான புகாரை  காவல்துறையிடம் ஏற்கனவே அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுகவை பிளவுபடுத்த ஓபிஎஸ் முயற்சிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக ஓபிஎஸ் வசம் உள்ளதால் அதை யாரும் பிளவுபடுத்த முடியாது, எடப்பாடி பழனிச்சாமி தான் தனித்து பிளவுபட்டு நிற்கிறார் என்று பெங்களூரு புகழேந்தி காட்டமாக  கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios