பெரியார் குறித்து பேசிய ரஜினி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி அளித்துள்ள மனுவில், ’’1971-ம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் பெரியார் ராமர், சீதை உருவங்களை கொச்சைப்படுத்தியது குறித்து ரஜினி பேசிய பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கும்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டு இருக்கிறார். 

இதையும் படியுங்கள்:- பெரியாரை பற்றி யோசித்து பேசுங்கள்... ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

ரஜினிகாந்த் துக்ளக் 50ம் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையானது. அதையொட்டி எழுந்த விவாதங்களுக்குப் பதிலளிக்காமல் இருந்த ரஜினி, இன்று காலை, ’’தான் சொன்ன கருத்து சரியானதுதான். இல்லாததை சொல்லவில்லை. அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை’’என்று தெரிவித்தார். ரஜினியின் இந்தப் பேட்டியும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.