தமிழகத்தில் எப்போது தேர்தல் வரும், எப்போது திமுகவை வீட்டுக்கு அனுப்பலாம் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும், அவரே கட்சியின் பொதுச்செயலாளராக தொடரவேண்டும் என்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு தொழுகையில் ஈடுபட்டு வருகிறார்.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் தொழுகையை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு இன்று சுடுகாடாக மாறிக் கொண்டு இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று தெரியாமல் அரசு உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட விவகாரங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
திருக்குறள் பற்றிய ஆளுநரின் கருத்தை சிலர் விளம்பரத்திற்காக எதிர்க்கின்றனர் - ஆர்.பி.உதயகுமார்
விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, குடிநீர் வரி, சொத்து வரி உயர்வு என எல்லா துறைகளிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போது தேர்தல் வரும், திமுக அரசை எப்போது வீட்டுக்கு அனுப்புவது என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த ஆன்மீக பயணத்தை கடந்த மாதம் தொடங்கினேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியை பார்க்க முடிகிறது.
ஓபிஎஸ் அணிக்கு தாவிய மைத்ரேயன்..! அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய இபிஎஸ்
அதிமுக தற்போது இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறது. விரைவில் தேர்தல் வரும். அப்போது சிறுபான்மை சமூகம் யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை அனைவரும் பார்ப்பீர்கள் என்றார்.
