திருக்குறள் பற்றிய ஆளுநரின் கருத்தை சிலர் விளம்பரத்திற்காக எதிர்க்கின்றனர் - ஆர்.பி.உதயகுமார்
பிரதமா மோடி, ஆளுநர் ரவி ஆகியோர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும்போது தமிழ் மொழியின் பெருமையை உணர முடிவதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை காந்தி மியூசியத்தில் அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமையில் காந்தி மீயூசிய வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று வளாகத்தில் அமைந்துள்ள புதர் மண்டிய பகுதிகளை தூய்மை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார்: அதிமுகவின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் சிறந்த நகரங்களுக்கான விருதினை மதுரையும்,சென்னையும் பெற்று இருந்தது. ஆனால் சமீபத்தில் 10 லட்சம் மக்கள் தொகை கணக்கீடு அடிப்படையில் 45 நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் சென்னை 44 வது இடத்திலும் மதுரை கடைசி இடமான 45ல் இடம் பெற்றுள்ளது. அரசு நகரத் தூய்மையின் மீது கவனம் செலுத்தி பணியினை மேற்கொள்ள வேண்டும்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் பல குடும்பங்கள் பாதுகாக்கப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்பொழுது அதை வலுவாக மீண்டும் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
அண்ணன் திமுக தலைவர்..! தங்கை துணைப்பொதுச்செயலாளர்..! வாரிசு அரசியலை உறுதிப்படுத்துகிறது- தமிழிசை
தென் மாவட்டங்களில் சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது. 6095 வழக்குகள் சிறாருக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளன. இதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின்தங்கியும், தற்கொலை பட்டியலில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது.
தமிழக முதல்வர் சென்னையில் 80% வடிகால் பணிகள் முடிந்ததாக கூறி இருக்கிறார். ஆனால் 30 முதல் 40 சதவீதம் வரையே பணிகள் நிறைவடைந்து இருப்பது கள நிலவரமாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழையின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டனர்.
அதேபோல அரசு வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். போதைப்பொருள் தடுப்பு, ரவுடிகள் தடுப்பு என டிஜிபி பல திட்டங்களை செயல்படுத்துகிறார். ஆனால் அது நடைமுறையில் பெருமளவு பலனளிக்கவில்லை. அது போல சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது போதைப் பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.
திருக்குறள் பற்றி கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆளுநரின் கருத்து சிலர் அதனை விளம்பரத்திற்காக எதிர்த்து வருகின்றனர். பிரதமர் மோடி ஆளுநர் என முக்கிய தலைவர்களின் உரையின் போது திருக்குறளை குறிப்பிட்டு வருவது தமிழ் மொழிக்கான பெருமை என்று தெரிவித்துள்ளார்.