அண்ணன் திமுக தலைவர்..! தங்கை துணைப்பொதுச்செயலாளர்..! வாரிசு அரசியலை உறுதிப்படுத்துகிறது- தமிழிசை
தலைவர் அண்ணன், துணைப் பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைக்கின்றனர். ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமம், திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழிக்கு எனது வாழ்த்துகள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின்
திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த சுப்புலெட்சுமி ஜெகதீசன் கட்சி தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக பதவி விலகினார். இந்தநிலையில் திமுகவின் உட்கட்சி தேர்தல் முடிவடைந்து திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காலியாகவுள்ள துணைப்பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அல்லது புதுக்கோட்டை விஜயாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளாராக டிஆர்.பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து காலியாக இருந்த துணைப்பொதுச்செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டார்.
வாரிசு அரசியல்- தமிழிசை
இந்தநிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தலைவர் அண்ணன், துணைப் பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைக்கின்றனர். ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமம், திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழிக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். இதே போல பாமக தலைவர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்