அச்சச்சோ.! பட்டின பிரவேசம் அடுத்த வருடம் நடக்காது.. அமைச்சர் சேகர்பாபு சொன்ன ஷாக்கிங் நியூஸ் !
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் செல்வதற்கான தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. இதனையடுத்து விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 'இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் குறைபாடுகள் இருப்பதாக புகார் வந்தால், அதனை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இன்று சேமாத்தம்மன் கோயிலினை ஆய்வு செய்துள்ளோம். இந்த கோயிலில் சில இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. குளம் வற்றியுள்ளது. இதுகுறித்தான நடவடிக்கை எடுக்கப்படும். சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளத்தினை சீரமைத்து மழைநீர் சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சாரப்பில், ஒரு ஆண்டிற்கு 1000 ஏக்கர் குறைந்தது 500 கோடி ரூபாய் அளவிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என்ற அளவில் செயல் திட்டம் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் சொத்துக்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யமுடியாத வகையில், சுற்றுச்சுவர் அமைத்து, இந்து சமய அறநிலைய துறை கோவிலுக்கு சொந்தமான சொத்து என கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 45 இடங்களில் இருந்த பல்லக்கு பவனி நடைமுறை தற்போது படிப்படியாக காலத்திற்கு ஏற்றவாறு குறைந்து வருகிறது.
இனி வருங்காலத்தில் அதற்கு மனித நேயத்துடன் கூடிய மாற்று ஏற்பாடு செய்ய துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு பட்டன பிரவேசம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஒரு ஆண்டு மட்டும் தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. ஜீயர்கள், ஆதினங்கள் உள்ளிட்ட ஆன்மீக பெரியவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் ஆவேச குரலுக்கு இந்த அரசு எதிர்வினை ஆற்றாது, அவர்களின் கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுக்கும். வசை பாடியவர்கள் என்று பாராது அவர்களும் ஆளும் அரசை வாழ்த்து அளவிற்கு செயல்படுவோம் என்று கூறினார்.
இதையும் படிங்க : இது இந்திய நாடா ? ஹிந்தி நாடா ? ஹிந்தி திணிப்புக்கு எதிராக பொங்கி எழுந்த ராமதாஸ்.!!