இபிஎஸ் நியமித்த நிர்வாகிகள் செல்லாது..! தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள நிர்வாகிகள் தொடர்பான அறிவிப்பு செல்லாது என ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவில் இரட்டை தலைமையை ரத்து செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் ஒற்றை தலைமை நியமிக்க வேண்டும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தை தனது ஆதரவாளர்களோடு ஓபிஎஸ் கைப்பற்றிய நிலையில் அதிமுகவின் அடிப்படை பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவி இடங்களில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. அதிமுக சார்பாக சட்டப்பேரவைக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக கடிதமும் கொடுக்கப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்திற்கும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கடிதம் எழுதப்பட்டது.
வாக்கி டாக்கி ஊழல்.. ஜெயக்குமாருக்கு அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!
அதிமுக அலுவலகம் யாருக்கு..! மல்லு கட்டும் ஓபிஎஸ் - இபிஎஸ்... நீதிமன்றத்தில் இன்று விசாரணை
இபிஎஸ் நியமித்த நிர்வாகிகள் செல்லாது
இந்தநிலையில், தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், இன்று வரை நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும் தெரிவித்துள்ளார். தனது பதவி காலம் தொடர்வதாக கூறியுள்ளார். ஏற்கனவே பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பொழுது தேர்தல் ஆணையத்திலும் அதை முறையிட்டுள்ள நிலையில் தனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக ஓபிஎஸ் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இது சட்ட விதோரதமானது என தெரிவித்துள்ளார். துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையை செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது என கூறியுள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள தகவல்களை ஏற்க வேண்டாம் என அந்த கடிதத்தில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்