வாக்கி டாக்கி ஊழல்.. ஜெயக்குமாருக்கு அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!
கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கடல் தாண்டி செல்லக்கூடிய மீனவர்கள் தங்களது எல்லைகளை தெரிந்துகொள்வதற்காக அதி நவீன வாக்கி டாக்கிகள் வாங்குவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் விதிமுறை மீறல் உள்ளது. பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் அரசுக்கு 35 கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கடல் தாண்டி செல்லக்கூடிய மீனவர்கள் தங்களது எல்லைகளை தெரிந்துகொள்வதற்காக அதி நவீன வாக்கி டாக்கிகள் வாங்குவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் விதிமுறை மீறல் உள்ளது. பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடைபெற்றுள்ளது. முறையான விசாரணை நடத்த வேண்டும் என மதுரையைச் சேர்ந்த மோகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க;- பொன்னையன், SP வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு.. பொது.செ ஆனவுடன் EPS அதிரடி .
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நீதிபதி பி.என்.பிரகாஷ் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக அதன் டி.எஸ்.பி. லாலுகுமார் இந்த மனு தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த நிலை அறிக்கையில், மீனவர்கள் பயன்பாட்டிற்கான அதிநவீன வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு குறித்து பல புகார்கள் வந்துள்ளது. கடலில் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்கி டாக்கி மொத்தமாக வாங்கியதில் முறைகேடு நடந்து உள்ளது என்ற மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் 35 .72 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளன. விசாரணை முழுமையடைய 3 மாத காலம் அவகாசம் தேவை என நிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க;- 3 பேரில் ஒருவர்தான் அதிமுக பொதுச்செயலாளர்.. கனவில் வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா - பரபரப்பை கிளப்பிய மேலாளர்
இதனை ஏற்றுக்கொண்டு மனுவை, மனுதாரர் திரும்பப் பெற்றதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுதாரர் மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டனர்.