Asianet News TamilAsianet News Tamil

ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆச்சு...இது போன்ற செயல் திமுக அரசின் ஈவு இரக்கமற்ற தன்மையை காட்டுகிறது- சீறும் ஓபிஎஸ்

ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்குக்கூட போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பது தி.மு.க. அரசின் ஈவு இரக்கமற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 
 

OPS has condemned the arrest of the visually impaired who protested against the teacher qualification test KAK
Author
First Published Feb 16, 2024, 8:05 AM IST | Last Updated Feb 16, 2024, 8:04 AM IST

திமுக வாக்குறுதி என்ன ஆச்சு.?

ஆசியர் தகுதி தேர்வு தொடர்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும்,

போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால், இதனை நிறைவேற்ற முன்வரவில்லை. மாறாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு என்ற முடிவினை தி.மு.க. எடுத்துள்ளது.

OPS has condemned the arrest of the visually impaired who protested against the teacher qualification test KAK

பார்வையற்ற மாற்றுத்திறனாளி போராட்டம்

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டுமென்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடியபோது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

திமுகவில் முக்கிய பிரமுகர் மறைவு! 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் செய்த ரெக்கார்டை சொல்லி கலங்கிய முதல்வர்.!

OPS has condemned the arrest of the visually impaired who protested against the teacher qualification test KAK

முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுப்பு

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பார்வை மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடைசியாக பூந்தமல்லி அருகே வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் விடியற்காலையில் இறக்கிவிடப்பட்டதாகவும், மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. தங்களது கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

OPS has condemned the arrest of the visually impaired who protested against the teacher qualification test KAK

ஈவுஇரக்கமற்ற தன்மை

தி.மு.க.,வின் வாக்குறுதிப்படி, தகுதித் தேர்வு முடித்த அனைவருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக போட்டித் தேர்வில் தி.மு.க. அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்குக்கூட போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பது தி.மு.க. அரசின் ஈவஇரக்கமற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அறநெறி மீறி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

உச்சத்திலையே நீடிக்கும் கேரட், அவரைக்காய் விலை... கோயம்பேட்டில் தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios