Asianet News TamilAsianet News Tamil

துரோகத்தை துரத்தியடிக்க.! சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்ட.. அனைவரும் ஒன்றினையனும்- அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

என்ன உதவி செய்தாலும் பாம்பின் குணம் போகவே போகாது. அது தன் விஷத்தை கக்கியே தீரும் என்பார்கள். பாம்பைப் போலவே சில மனிதர்களும் உள்ளனர். அவர்களை விரட்டி அடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 

OPS has called for everyone to come together to end betrayal
Author
First Published Apr 23, 2023, 7:48 AM IST | Last Updated Apr 23, 2023, 7:48 AM IST

திருச்சியில் முப்பெரும் விழா

திருச்சியில் நாளை (24 ஏப்ரல்) நடைபெறவ்வுள்ள முப்பெரும் விழாவிற்கு அழைப்பு விடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதை நன்கு அறிந்திருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், கட்சியின் உச்சபட்ச பதவிக்கு வருபவர் அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்ற விதியை வகுத்தார். தொண்டர்களையும், மக்களையும் இரு கண்களாக பாவித்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்த மண்ணைவிட்டு மறைந்த பின்பும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழக உடன்பிறப்புகளுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்ததை காலம் போற்றி பாதுகாக்கிறது.

PTR Audio: நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!

OPS has called for everyone to come together to end betrayal

அதிமுக சட்ட விதிகள் மாற்றம்

தமிழக மக்கள் போற்றி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த அடிப்படை விதியான அடிமட்டத் தொண்டர்கள் தான் கழகத் தலைமைப் பதவிக்கு வருபவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும் மாற்றவில்லை. 'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற உயரிய இலட்சியத்துடன் வாழ்ந்ததால்தான், வரலாற்றின் பக்கங்களில் ஓர் உறுதியான இடத்தை பிடித்து, மக்கள் மனங்களில் இன்றளவிலும் நிறைந்து இருக்கிறார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இத்தகைய பெருமைக்குரிய ஈடு இணையற்ற தலைவர்கள் கட்டிக் காத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் அடிப்படை விதிகளெல்லாம் மாற்றப்பட்டு,

OPS has called for everyone to come together to end betrayal

குரங்கு கையில் கிடைத்த பூமாலை

சின்னாபின்னமாகி, சுக்குநூறாக சிதறுண்டு ஒரு சிலரின் கையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை நினைக்கும்போது, "குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல" என்ற பழமொழிதான் அனைவரின் நினைவிற்கும் வருகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்கள்தான் என்பது மாற்றப்பட்டு இருப்பதும், கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவருக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது என்பதும், கட்சியை உருவாக்கிய மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கட்சியைக் கட்டிக் காத்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் இழைக்கும் துரோகம்.

OPS has called for everyone to come together to end betrayal

பாம்பின் குணம் போகவே போகாது

என்ன உதவி செய்தாலும் பாம்பின் குணம் போகவே போகாது. அது தன் விஷத்தை கக்கியே தீரும் என்பார்கள். பாம்பைப் போலவே சில மனிதர்களும் உள்ளனர்.அவர்களை விரட்டி அடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. இந்தத் துரோகத்தை முறியடிக்க சட்டப் போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டு வந்தாலும், இதற்கான நிரந்தரத் தீர்வு தமிழக மக்களிடத்திலும், கழகத் தொண்டர்களிடத்திலும்தான் இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். அரசியலில் எத்தனையோ பரமபத விளையாட்டுக்கள், ஆடுபுலி ஆட்டங்களை கடந்துதான் ஆகவேண்டும். அரசியல் சதுரங்கத்தில் தீராத விளையாட்டுக்களோடு ஓய்ந்து போகாத ஆட்டக் களங்கள் என்று சலியாத போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இவற்றை நாம் எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கு நமது உழைப்பு மிகவும் அவசியம்.

OPS has called for everyone to come together to end betrayal

சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்டுங்கள்

ஒவ்வொரு கல்லும் தனக்குள் ஒரு சிலையை ஒளித்து வைத்திருக்கிறது. அவற்றை சுத்தியால் உடைத்தால் சிலை உருவாகாது. உளியால் செதுக்க வேண்டும். உழைப்பு எனும் உளியால் விடா முயற்சியுடன் செதுக்கினால் தான் வெற்றி எனும் சிலைவெளிப்படும். இதைப் போல நம்முடைய உழைப்பின் மூலமாக, துரோகத்தை துரத்தியடிக்கும் வகையில், ஜனநாயகத்தை ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்டும் வண்ணம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  முப்பெரும் விழா திருச்சி, ஜி கார்னர் மைதானத்தில் 24-04-2023 அன்று மாலை 5-00 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த முப்பெரும் விழாவிற்கு அனைவரும் அலை கடலென திரண்டு வாரீர்! வாரீர்! ஆதரவு தாரீர்! தாரீர்! என அழைப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் அதிமுவிற்கு வர வேண்டும்.! ஓபிஎஸ்க்கு அழைப்பா.? - செல்லூர் ராஜு அதிரடி

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios