Asianet News TamilAsianet News Tamil

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? நாளையுடன் முடிவடையும் உச்சநீதிமன்றத்தின் கெடு.! ஓபிஎஸ் அவசர ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். 

OPS consults with its supporters regarding declaration of candidate in Erode by election
Author
First Published Feb 1, 2023, 1:39 PM IST

வேட்பாளரை அறிவித்த இபிஎஸ்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு பேரும் தனி அணியாக செயல்பட்டு வருவதால் ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் இரண்டு தரப்புக்கும் கிடைக்காமல் முடங்கும் நிலை உள்ளது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு மீது தேர்தல் ஆணையமும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் பதில் அளிக்க கோரி 3 நாட்கள் ஆவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்.! ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுக்கும் டிடிவி தினகரன்

OPS consults with its supporters regarding declaration of candidate in Erode by election

உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

இந்தநிலையில் 3 நாட்கள் அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. நாளை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லையென அறிவித்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி தங்கள் அணி சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். இந்த நிலையில்  அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தால்______இருக்காது.! சீமானுக்கு எச்சரிக்கை விடும் திமுக எம்எல்ஏ

OPS consults with its supporters regarding declaration of candidate in Erode by election

அவசர ஆலோசனையில் ஓபிஎஸ்

இந்த ஆலோசனையில், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்,சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன்,ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தங்கள் அணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாகவும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய மனு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

கழிப்பறையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்! சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிக் கல்வித் துறை- அண்ணாமலை ஆவேசம்

Follow Us:
Download App:
  • android
  • ios