Asianet News TamilAsianet News Tamil

கழிப்பறையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்! சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிக் கல்வித் துறை- அண்ணாமலை ஆவேசம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், அவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Annamalai has condemned the incident of government school students cleaning the toilet
Author
First Published Feb 1, 2023, 1:00 PM IST

கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்று வருவதாகவும், எனவே இதனை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிதிலமடைந்து கிடக்கும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, தொடர்ச்சியாக அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

கருணாநிதிக்கு நினைவுச்சின்னம்.!தமிழ்நாட்டின் வரலாற்றுப் பேனாவாக இருக்க வேண்டும்-பாஜகவை வெறுப்பேற்றும் காயத்ரி

 

அவல நிலைக்கு தள்ளும் தமிழக அரசு

நேற்று ஆண்டிப்பட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்த அவலம் நடந்திருக்கிறது.கடந்த ஒரு ஆண்டில் மட்டும், இது போல அரசுப் பள்ளி மாணவர்களை, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஆனால், அரசு இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எந்த வித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், அவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன. 

Annamalai has condemned the incident of government school students cleaning the toilet

கடுமையான நடவடிக்கை எடுத்திடுக

தமிழகத்தில் பல தலைவர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அரசுப் பள்ளியில் படித்து முன்னேறியவர்கள் என்பதை திறனற்ற திமுக அரசு ஞாபகத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக அரசு தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது துறை நாட்டின் எதிர்காலத்துக்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர் தென்னரசு- இபிஎஸ் அறிவிப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios