கருணாநிதிக்கு நினைவுச்சின்னம்.!தமிழ்நாட்டின் வரலாற்றுப் பேனாவாக இருக்க வேண்டும்-பாஜகவை வெறுப்பேற்றும் காயத்ரி

புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

Gayatri Raghuram has said that the pen monument should be the historical pen of Tamil Nadu

கடலில் பேனா சிலை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடலில்  ரூ.81 கோடி மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவு தெரிவிம், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை பதிவு செய்தனர்.

கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தால்______இருக்காது.! சீமானுக்கு எச்சரிக்கை விடும் திமுக எம்எல்ஏ

Gayatri Raghuram has said that the pen monument should be the historical pen of Tamil Nadu

பேனா சின்னம்-பாஜக எதிர்ப்பு

பாஜக சார்பாக கருத்து தெரிவித்த எம்சி முனுசாமி, கடலில் நினைவு சின்னம் அமைப்பது  மிகவும் அபத்தமானது.கடற்கரையை காக்கும் ஒரே சமுதாயம் மீனவர் சமுதாயம். கடற்கரையில் அண்ணா,எம்.ஜி.ஆர், கருணாநிதி,ஜெயலலிதா நினைவிடங்கள் உள்ளது. யாரும் கடற்கரைக்கு உள்ளே நினைவு சின்னம் அமைக்கவில்லை.  கருணாநிதி தான் 133 அடியில் வள்ளுவருக்கு சிலை வைத்தார் பேனா நினைவு சின்னம் 137 அடி,  வள்ளுவரை விட பெரியவரா கருணாநிதி என ஆவேசமாக பேசினார். இதற்க்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.  இந்த நிலையில் பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பேனா பொதுவானது, பேனா சிலையை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது, 

 

ஜனநாயக குரலாக இருக்க வேண்டும்

அனைவரும் சுற்றுலா பார்வையிடக்கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும், பேனா ஒரு சிறந்த கருவியாகும், சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த பேனா ஒரு அரசியல் கட்சிக்கு சேர்ந்தவையாக இருக்கக்கூடாது, இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக வேட்பாளரை அறிவித்த எடப்பாடி..! யார் இந்த தென்னரசு.? எத்தனை முறை எம்எல்ஏவாக தேர்வானர் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios