கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் கடலில் வைத்தால் உடைப்பேன் எனக்கூறிய சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தாலும் அப்புறம்_______________ இருக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கருணாநிதிக்கு கடலில் நினைவிடம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடலில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவு தெரிவிம், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை பதிவு செய்தனர்.

நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதற்கு இது தான் காரணம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சொன்ன பரபரப்பு தகவல்..!

கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

பாஜக சார்பாக பேசிய நிர்வாகி முனுசாமி, வள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா அவரை விட இவருக்கு ஏன் அதிகமான உயரத்தில் நினைவிடம் என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து பேசிய ஆம் ஆத்மி நிர்வாகி சென்னையே மூழ்க போகிறது என கூறுகிறார்கள். இதில் 81 கோடியில் நினைவு சின்னமா என கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் கடலில் அமைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் அதனால் அங்கு அமைக்க கூடாது. வேண்டுமானால் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் அதையும் மீறி வைத்தால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் அதை இடிப்பேன் என்று பேசினார். இதன் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக திமுகவினர் முழக்கம் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது.

சீமானுக்கு எச்சரிக்கை

சீமானின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

Scroll to load tweet…

கலைஞர் எனும் ஆலமரத்தின் அடியில் பிழைத்து வந்த புழுக்களெல்லாம் அவரது நினைவை சீண்டிப் பார்க்க நினைக்கின்றன. கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தாலும் அப்புறம்__________ இருக்காது. மீண்டும் சொல்கிறேன். நாகரீக அரசியலெல்லாம் இதுகளிடம் சரி வராது என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜக இருக்கும் துணிச்சலில்தான் சீமான் இப்படி பேசுகிறார்.. அவரின் திமிரை அடக்கியே தீரணும்.. சுப.வீரபாண்டியன்.!