இறுதி அஸ்திரத்தை ஏவும் ஓபிஎஸ்.. இன்று என்ன நடக்கும்? இபிஎஸ் வீழ்வாரா? மீண்டும் திமிரி எழுவாரா?
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு ஆகியவை செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு ஆகியவை செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறதா? எடப்பாடி பழனிசாமி சொன்ன ஒற்றை வார்த்தை..!
அப்போது, தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டது. அந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். அதேபோல், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பிரபாகர் ஆகியோர் தரப்பில் தாங்களும் மேல்முறையீடு செய்து இருப்பதாகவும், தங்களது மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்பதால் ஓபிஎஸ் வழக்குடன் தங்களது வழக்கையும் சேர்த்து மதியமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க;- தொப்பி, கண்ணாடி போட்டால் நீங்கள் எம்.ஜி.ஆரா? இபிஎஸ்-ஐ விமர்சித்த வி.பி. துரைசாமி..!
பின்னர் ஓபிஎஸ் உட்பட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் ஒன்றாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யும் பட்சத்தில் அவரது அரசியல் அஸ்தமனமாகும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் எடப்பாடிக்கு சிக்கல் தான்.