ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு.. தேதி குறித்த உச்சநீதிமன்றம்.. விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் தெரியுமா?
கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுவை ஜூலை 28ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கியது. கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !
இதனிடையே, இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓபிஎஸ் தரப்பின் மனுவை விசாரித்தால் தங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதே நேரத்தில் உரிய தேதியை சொல்ல முடியாது தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க;- என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி அமர்வில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு முக்கிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்.. உரிமையியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!