ஆளுநருக்கு எதிராக தீர்மானம்..! முன்னரே அறிந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி அணி-வாக்கெடுப்பில் பங்கேற்காத ஓபிஎஸ்
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசு தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதை தவிர்க்கும் வகையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது.
ஆளுநர்- தமிழக அரசு மோதல்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தாலே அது நிராகரிக்கப்பட்டதாக தான் அர்த்தம் என பேசியிருந்தது சர்ச்சையானது .இதனையடுத்து தமிழக அரசியில் கட்சிகள் ஆளுநர் ரவியின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்தநிலையில் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் கண்டிக்கும் வகையிலும் எதிராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழக ஆளுநருக்கு எதிராக இறங்கி அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம்.?
சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு
ஆளுநர் குறித்து விவாதிப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிய அவை முன்னவர் துரைமுருகன் ஓப்புதல் கேட்டார். இதற்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் மற்றும் அவரது செயல்பாடு குறித்து விவாதிப்பதற்கு எதிராக உள்ள விதியை தளர்த்த தீர்மானத்தை துரைமுருகன்முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, உத்தரவின் படி பேரவை வாயில்கள் மூடப்பட்டன. பின்னர் பேரவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வாக்கெடுப்பு முறையில் பேரவை விதிகளை தளர்த்த தீர்மானம் பெரும்பான்மையாக கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து பேரவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 144 ஆதரவும், 2 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கலந்து கொள்ளாத ஓபிஎஸ்-இபிஎஸ்
இந்தநிலையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் சட்டப்பேரவையில் வர இருப்பதை முன்னரே அறிந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஓபிஎஸ்க்கு இருக்கை வழங்கியதற்கு எதிர்ப்பு செய்வதாக கூறி வெளிநடப்பு செய்திருந்தது. இதனையடுத்து வாக்கெடுப்பில் பங்கேற்க கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அணியும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதையும் படியுங்கள்
எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றிடுக..! ஓபிஎஸ்க்கு எதிராக சட்டப்பேரவையில் இறங்கி அடிக்கும் எடப்பாடி