தமிழக ஆளுநருக்கு எதிராக இறங்கி அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம்.?
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும் குடியரசு தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தீர்மானத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வர உள்ளார்.
தமிழக அரசு-ஆளுநர் மோதல்
தமிழக ஆளுநருக்கம்- தமிழக அரசுக்கும் இடையே கட்ந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் மத்தியில் பேசும் ஆளுநர் தமிழக அரசை விமர்சித்தும், அரசின் திட்டங்களை குறை கூறியும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பாராட்டியும் பேசி வந்தார். இதற்க்கு அமைச்சர்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் ஐஏஎஸ் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ரவி, ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தாலே அது நிராகரிக்கப்பட்டதாக தான் அர்த்தம் என பேசியிருந்தது சர்ச்சையானது .
ஆளுநரின் சர்ச்சை கருத்து
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய அனுமதி அளிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது . இந்த தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டு வர உள்ளார். இந்த தீர்மானத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள 14க்கும் மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அனுமதி அளிக்காமல் காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதை எதிர்ப்பு தெரிவிக்ககும் வகையில் வருத்தத்தையும் பதிவு செய்யப்படவுள்ளது.
அப்பாயின்மென்ட் கேன்சல்.. ஈபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திக்காத மோடி - ஒருவேளை அவரா இருக்குமோ.!!
தனி தீர்மானம் நிறைவைற்ற திட்டம்
மேலும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவி , எடுத்துக்கொண்ட பதவி பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு அரசமைப்பு சட்டத்திற்கும், கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும், பேரவையின் மாண்பை குறைத்து பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது எனவும் தனி தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநருக்கு அறிவுரை கூறுங்கள்
எனவே சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசையும் குடியரசு தலைவரையும் வலியுறுத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. ஆளுநருக்கு உரிய அறிவுரைகளையும் மத்திய அரசும் குடியரசு தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று சட்டப்பேரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்
அதிமுக முன்னாள் அமைச்சரை அடிக்க பாய்ந்த பழனிச்சாமி.. நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!