Asianet News TamilAsianet News Tamil

அதிமுக முன்னாள் அமைச்சரை அடிக்க பாய்ந்த பழனிச்சாமி.. நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!

 திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் குமார் நகரில் நேற்று நடைபெற்றது. இதில்,  மாநகர மாவட்ட செயலாளரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில்  நடைபெற்றது. 

AIADMK executive rushed to beat former minister in tirupur
Author
First Published Apr 10, 2023, 7:31 AM IST | Last Updated Apr 10, 2023, 7:37 AM IST

திருப்பூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மீது நிர்வாகி ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதும் உறுப்பினர் சேர்க்கைக்கான முதல் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதையும் படிங்க;- AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?

AIADMK executive rushed to beat former minister in tirupur

இதனையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் குமார் நகரில் நேற்று நடைபெற்றது. இதில்,  மாநகர மாவட்ட செயலாளரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார், முன்னாள் அமைச்சரும், பல்லடம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எஸ். ஆனந்தன்,  முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க;-  நிலக்கரி சுரங்க அறிவிப்பில் இருந்து பின்வாங்கிய மத்திய அரசு..! நாங்கள் தான் காரணம் என மார் தட்டும் இபிஎஸ்

AIADMK executive rushed to beat former minister in tirupur

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பொள்ளாச்சி ஜெயராமன் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த வார்டு செயலாளர்களிடம் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, 25வது வார்டு படிவத்தை கவுன்சிலர் தங்கராஜியிடம் வழங்கிய போது அதே வார்டை சேர்ந்த  அதிமுக நிர்வாகி பழனிச்சாமி என்பவர் தன்னிடம் படிவத்தை வழங்குமாறு கூறி தங்கராஜிடம்  வாக்குவாதம் செய்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

AIADMK executive rushed to beat former minister in tirupur

அப்போது கவுன்சிலர் தங்கராஜுக்கு ஆதரவாக எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன், அதிமுக நிர்வாகி பழனிச்சாமியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, எம்.எஸ்.எம். ஆனந்தனையும் தாக்க முற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios