எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றிடுக..! ஓபிஎஸ்க்கு எதிராக சட்டப்பேரவையில் இறங்கி அடிக்கும் எடப்பாடி
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக அதிகார மோதல்
தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் ஏற்கனவே நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கவிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதமும் கொடுக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வமும் பதில் கடிதம் அனுப்பினார். அதில் தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையை மாற்றிடுக
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி நேரடியையாக எதிர்பு தெரிவித்தார். இதன் காரணமாக சட்டமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளுக்கு இடையே கை கலப்பு ஏற்படும் நிலை உருவானது. இந்தநிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பிரச்சனை எழுப்பினார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கின்ற இருக்கையை, மரபு அடிப்படையில், பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநயாகர் அப்பாவு, இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீண்ட விளக்கம் அவையில் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அறிக்கையில் கூறிய படி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லையென்றும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசக்கூடிய கருத்துக்கள் நேரடி ஒளிபரப்பில்வருவதில்லை என குற்றச்சாட்டப்பட்டது. அமைச்சர்கள் முதலமைச்சர் பதில் மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படியுங்கள்