ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் வழிபாடு.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கம். 

opanneerselvam visit rameshwaram ramanathaswamy temple

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் குடும்பத்தினரோடு ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடி வழிபாடு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கம். அதோடு பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர். இதனால் இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையும் என்பது அவர்களது நம்பிக்கை.

இதையும் படிங்க;- பண்ருட்டி ராமசந்திரன் அரசியலுக்கு வந்த போது, டவுசர் அணிந்து பள்ளிக்கூடம் சென்றவர் இபிஎஸ்- கோவை செல்வராஜ்

opanneerselvam visit rameshwaram ramanathaswamy temple

இந்நிலையில், ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்ததை அடுத்து நேற்று ஓபிஎஸ் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு மகன் ஜெயபிரதீப், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சென்று திதி கொடுத்தார்.

opanneerselvam visit rameshwaram ramanathaswamy temple

பின்னர், அக்னி தீர்த்த கடலில் நீராடி அவரது மனைவிக்கு திதி கொடுத்த அவர் தொடர்ந்து ராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 புனித திருத்தங்களில் புனித நீராடினார். பிறகு கன்னிகா பரமேஸ்வரி மகாலில் சிறப்பு யாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

இதையும் படிங்க;- EPS என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவா? தேர்தல் வரப்போகுது பார்த்துக்கோங்க..எடப்பாடியை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்கள் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios