Asianet News TamilAsianet News Tamil

பண்ருட்டி ராமசந்திரன் அரசியலுக்கு வந்த போது, டவுசர் அணிந்து பள்ளிக்கூடம் சென்றவர் இபிஎஸ்- கோவை செல்வராஜ்

அதிமுகவை  அழிப்பதற்கென்றே எடப்பாடி பழனிசாமி ஒரு சூனியமாக வந்துள்ளார் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் ஆவேசமாக விமர்சித்துள்ளார்

Kovai Selvaraj criticized EPS as the cause of AIADMK's downfall
Author
First Published Sep 18, 2022, 1:21 PM IST

ஓபிஎஸ்- இபிஎஸ் வார்த்தை மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் பண்ருட்டி ராமசந்திரடை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். அப்போது கருத்து தெரிவித்த அவர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென கூறினார். இதற்கு பதில் அளித்த இபிஎஸ் பண்ருட்டி ராமசந்திரனுக்கு கிளை செயலாளர் பதவிக்கு கூட தகுதி இல்லையென கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்..இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்தில் எந்த கோரிக்கைக்கு சென்றாரோ அந்த கோரிக்கையை மறந்துவிட்டு கட்சியினுடைய மூத்த தலைவர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரனை  மிகவும் தரமற்று பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கிறோம்.

உதயநிதி செங்கலை தூக்கி காண்பித்த ராசி..! செங்கல், ஜல்லி பொருட்கள் விலை உயர்ந்து விட்டது- செல்லூர் ராஜூ

Kovai Selvaraj criticized EPS as the cause of AIADMK's downfall

டவுசர் போட்டு பள்ளிக்கு சென்ற இபிஎஸ்

பண்ருட்டி ராமச்சந்திரன்  அரசியலுக்கு வரும்போது எடப்பாடி அரை  டவுசர் அணிந்து பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருப்பார் எனவும், எடப்பாடி பழனிசாமி தலைமை பண்பு இல்லாதவர் என்றும் கூறினார். ஜெயலலிதா அவர்களால் நல்ல தலைவர் என பெயர் எடுத்தவரை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி வருகிறார் என்றும்,  ஓ.பி.எஸ் ஐ ஆதரிப்பவர்களை எல்லாம் எடப்பாடி விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு அதிமுக நான்காக பிரிந்துள்ளதாகவும், அதிமுக மக்கள் பிரச்சினை எடுத்து வைக்காமல் உட்கட்சி சண்டையிட்டுக் கொண்டுள்ளதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் தெரிவித்தார்.  கொடநாடு வழக்கு தீர்ப்பில் குற்றவாளி யார் என்று தெரியும் பொழுது இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் ஓபிஎஸ் தலைமையில் கட்சி நடைபெறும் என தெரிவித்த அவர்,ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை இருக்கும் பழனிசாமி செய்த தவறுகள் பட்டியலிட்டு சொல்லப்படும் என்றார். 

திருக்குவளை சமஸ்தான கொத்தடிமை ஆர்.எஸ்.பாரதிக்கு நாவடக்கம் தேவை..! இறங்கி அடித்த ஜெயக்குமார்

Kovai Selvaraj criticized EPS as the cause of AIADMK's downfall

இபிஎஸ் ஒரு சூனியம்

அதிமுக கட்சியை அழிப்பதற்குகேன்றே ஒரு சூனியமாக வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறினார்.  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புவரித்துறை தொடர்ந்து ரெய்டு செல்வது தவறில்லை, தவறு செய்யாமல் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் , அதை விட்டுவிட்டு எஸ்பி வேலுமணி இல்லம் முன்பு அதிமுக தொண்டர்கள் அமருவது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பிரதமர் மோடி இப்படி வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க தயார்..! பாஜகவை உசுப்பேத்திய திருமாவளவன்

Follow Us:
Download App:
  • android
  • ios