உதயநிதி செங்கலை தூக்கி காண்பித்த ராசி..! செங்கல், ஜல்லி பொருட்கள் விலை உயர்ந்து விட்டது- செல்லூர் ராஜூ
திமுக அரசு ரெய்டால் அதிமுகவை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு பாரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம்
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. நேற்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அதிமுக அரசு மக்களுக்காக கொண்டு வந்த மின் கிளினிக் திட்டத்திற்கு திமுக அரசு மூடு விழா நடத்தியுள்ளதாக தெரிவித்தார். இதற்கு பதிலாக மக்களை தேடி மருத்துவம் என அறிவித்தார்கள் ஆனால் எந்த ஒரு மருத்துவரும் வீடு தேடி வரவில்லை என விமர்சித்தார்.
மின்கட்டணத்தை உயர்த்த மாட்டேன் எனக்கூறி வாக்குகளையும் வாங்கிவிட்டு மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்திவிட்டதாக குற்றம்சாட்டினார். திமுக அரசு நடந்தால் வரி, நின்றால் வரி, சும்மா இருந்தலும் வரி போடுவார்கள்.இந்த ஆட்சியில் யாருமே சுபிட்சமாக இல்லை என தெரிவித்தவர், மக்கள் பேசாமல் இருப்பதால் மஞ்ச குளிக்கிறார்கள். திமுக தேர்தல் வராது என நினைக்கின்றனர்.ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசுக்கு சரியான பதிலடியை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
திருக்குவளை சமஸ்தான கொத்தடிமை ஆர்.எஸ்.பாரதிக்கு நாவடக்கம் தேவை..! இறங்கி அடித்த ஜெயக்குமார்
அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்
திமுக அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு யார் என எங்களுக்கு தெரியும், ஸ்டாலின், அவர் குடும்பம் அந்த குடும்பத்தின் பின்னணி என்ன, இவ்வளவு சொத்துக்கள் அவர்களுக்கு எப்படி வந்தது என கேள்வி எழுப்பினார். ரெய்டால் அதிமுகவை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு நரி. சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம், கலைஞர் காலத்திலேயே மிரட்டல் உருட்டல் அதிகாரத்தை பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் ஒரு நாளும் பயப்பட மாட்டோம் என தெரிவித்தார்.
ஒரே கையெழுத்தில் நீட் ரத்து எனக்கூறி இப்போதும் மக்களை ஏமாற்றி கொண்டு தான் திமுக அரசு இருப்பதாக கூறினார். உதயநிதி என்று செங்கலை தூக்கி காண்பித்தாரோ அன்றே செங்கல் விலையெல்லாம் உயர்ந்துவிட்டது. உதயநிதியின் ராசியோ என்னவோ செங்கல் ஜல்லி கட்டுமான பொருட்கள் என எல்லாமே விலை கூடி விட்டதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்