அடிக்கடி குழந்தை என்பது அன்னைக்கு கேடு; அடிக்கடி தேர்தல் என்பது நாட்டிற்கு கேடு - ஆளுநர் ராதாகிருஷ்ணன் பஞ்ச்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

one nation one election project will improve our nations development says jharkhand governor cp radhakrishnan vel

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் தமிழகம் வந்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மீண்டும் ஜார்கண்ட் புறப்பட்டார். அப்போது அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'ஜாதிகளில் உயர்வு தாழ்வு என்பதை இந்து மதமோ, சனாதன தர்மமோ வலியுறுத்துவதில்லை. காலம் காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது என்பது திமுகவிற்கு வாடிக்கையாகி விட்டது. அவர்கள் இன்னும் 1952லேயே இருக்கிறார்கள். காலம் மாறி வருகிறது. பாரம்பரியமும், பெருமையும் காக்கப்பட வேண்டும் என தமிழர்கள் விரும்புகின்றார்கள்.

தேவையில்லாதவற்றை தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தில் திமுக அரசு கருத்தைச் செலுத்துவதும், கவனத்தைச் செலுத்துவதும் தான் திமுகவிற்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லது. திமுகவில் எல்லோரும் சேர்ந்து தான் பாரம்பரியத்துக்கு எதிராக பேசுகிறார்கள். உதயநிதி பேசினால் அதை எதிர்த்து பேசக்கூடிய அளவிற்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் இருப்பார் என எதிர்பார்ப்பது சத்தியம் இல்லை. ஒட்டு மொத்த திமுக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

திருச்சியில் பரபரப்பு; அண்ணாசிலை மீது வெண்டைக்காய் வீச்சு; விவசாயிகள், காவல்துறையினர் தள்ளுமுள்ளு!!

அடிக்கடி தேர்தல் தேர்தல் என்பது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு இவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் ? ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் முடிவுகளை எடுப்பதற்கு எந்த கட்சியாக இருந்தாலும், எந்த தலைவராக இருந்தாலும் அது சாத்தியம்.

அடிக்கடி தேர்தல் வரும் பொழுது பல்வேறு விதமான சமாதானங்களை செய்ய வேண்டிய நிலை இருக்கும். அது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது. திமுக அரசு ஆளுநரிடம் பகை வளர்த்துக் கொண்டிருக்கிறது. காசு எதிர்பார்க்காத நல்ல ஆளுநர் கிடைத்திருக்கிறார். இதைவிட என்ன வேண்டும் இவர்களுக்கு? தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை கொண்டிருக்க கூடிய ஆளுநர் கிடைத்திருக்கிறார்.

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் அதிரடி கைது

இவர்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார் என்பதற்காக நீட்டை அவர்   அமல்படுத்த முடியுமா? முடியாது என்று தெரிந்தே நீட்டை கொண்டு  வருவதாக கூறி விட்டு இப்போது பழியை ஆளுநர் மீது தூக்கிப் போடுகிறார்கள். மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்பது, நமக்கு சர்வாதிகாரத்தை தந்து விடாது. அரசியல் சாசனத்தில் எது சொல்லப்பட்டு இருக்கிறதோ, உச்ச நீதிமன்றத்தில் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எது இருக்கிறதோ அது மட்டும் தான் ஆளுநரால் முடியும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios