Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதிய பத்திரிகையாளரை கைது செய்தது நியாயமா ? கொந்தளித்த சீமான் !

ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக பத்திரிக்கையாளரை கைது செய்வதா ? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Ntk seeman condemns arresting journalist in srimathi death case
Author
First Published Sep 11, 2022, 8:14 PM IST

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக மூத்த பத்திரிகையாளர் ஐயா சாவித்திரி கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். 

Ntk seeman condemns arresting journalist in srimathi death case

மேலும் செய்திகளுக்கு..“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?

ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை சனநாயக உரிமையான கருத்து சுதந்திரத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள இக்கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இதுவரை இல்லாத நடைமுறையாக, வழக்குக்குறித்து புலனாய்வுசெய்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரைக் கைதுசெய்வதும், அதுகுறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடைவிதிப்பதுமான போக்குகள் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். 

ஸ்ரீமதி மரணத்தில் புலப்படாதிருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்டக் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத்தரக் கோரியுமாக இயங்கி வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் ஏற்கவே முடியாத சனநாயகப் படுகொலையாகும். ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டுக் கருத்துப்பரப்புரை செய்த, போராடிய இளைஞர்களைக் கைதுசெய்து சிறையிலடைப்பதும், இதுகுறித்துப் பேசவிடாது ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிப்பதுமான திமுக அரசின் அதீதச்செயல்பாடுகள் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. 

மேலும் செய்திகளுக்கு..மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !

Ntk seeman condemns arresting journalist in srimathi death case

யாரைக் காப்பாற்றுவதற்காக? எல்லோரையும் பேசவிடாது, நெருக்கடி கொடுத்து இவ்வாறு முடக்குகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மீதான கைது நடவடிக்கையைக் கைவிட்டு, அவரை எவ்வித வழக்குமின்றி விடுவிக்க வேண்டுமெனவும், கருத்து சுதந்திரத்திற்கெதிரான இக்கொடுங்கோல்போக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios