“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்
அமைச்சர் மூர்த்தியின் குடும்ப திருமணத்திற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்தன என்று கூறப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்துவார்கள். தற்போது அந்த பட்டியலில் திமுக அமைச்சர் மூர்த்தியும் இணைந்துள்ளார். மதுரையை குலுங்க வைத்து, ஒட்டுமொத்த திமுகவினரிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
அமைச்சர் பி.மூர்த்தியின் மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் திருமணம் நடந்தது. பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்தன என்று கூறப்படுகிறது. பிரமாண்ட கோட்டை நுழைவு வாயில், ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல், ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் அமரும் வகையில் சாப்பாட்டுப் பந்தல், விஐபி டைனிங் என பாகுபலியை மிஞ்சும் பிரமாண்டத்தை காட்டினார்கள்.
மேலும் செய்திகளுக்கு..மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !
மொய் வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் 50 ஹைடெக் கவுன்ட்டர் அமைக்கப்பட்டிருந்தது. கறி விருந்துக்காக கிட்டத்தட்ட சுமார் 2,000 ஆடுகள், 5,000 கோழிகள் மூலம் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன. சைவ விருந்துக்கு தனிப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.
அனைவருக்கும் பல பொருள்கள் அடங்கிய தாம்பூலப்பை வழங்கப்பட்டது. ஆனால் இந்த திருமண விழா பொதுமக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவு கூற வேண்டும். ஏனென்றால் தனது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தை அந்த காலத்திலேயே கோடிக்கணக்கில் செலவு செய்தார்.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா உடன் பிறந்த அக்கா வனிதாமணியின் கடைசி மகன்தான் சுதாகரன். தினகரன், பாஸ்கரனுக்கு அடுத்ததாகப் பிறந்தவர் இவர். அப்போதே இவ்வளவு பெரிய ஆணை தத்தெடுப்பதா என தமிழகமே மூக்கு மீது விரலை வைத்தது. ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே நடிகர் சிவாஜி கணேசன் பேத்தியோடு சுதாகரனுக்கு திருணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே தொடங்கியது சர்ச்சை.
மேலும் செய்திகளுக்கு..“திருப்பூரில் 20 ஆயிரம் டி-சர்ட்.. ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை என்ன ?”.. கே.எஸ் அழகிரி கொடுத்த விளக்கம்.!
சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணி இந்த திருமணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பில் பந்தல் அமைத்தார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள். 25 ஆயிரம் பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கு என பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டத்தை அப்பொழுதே காட்டினார் ஜெயலலிதா. இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
அது பெரும் சர்ச்சையாகியது. காரணம் பலருக்கும் தெரியாது என்றுதான் கூற வேண்டும். மாதம் 1 ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்குகிறேன் என்று கூறிய ஜெயலலிதாவா இப்படி பிரமாண்டமாக நடத்துகிறார் ? என்று கேள்வி எழுந்தது. பொதுமக்கள் மத்தியில் இது பேசுபொருளாகி சர்ச்சையானது.அதிமுக ஆட்சி மாற்றத்திற்கு இதுதான் பெரிய காரணம் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் திமுக அமைச்சர் மூர்த்தியின் இந்த பிரமாண்ட திருமணம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதே உண்மை.
மேலும் செய்திகளுக்கு..“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?