Asianet News TamilAsianet News Tamil

ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதில் உண்மையில்லை... பழனிவேல் தியாகராஜன் அதிரடி!!

அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி  உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் முழு உண்மையில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

nirmala sitharaman said about GST is not true says palanivel thiyagarajan
Author
Chennai, First Published Aug 4, 2022, 6:39 PM IST

அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி  உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் முழு உண்மையில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு மற்றும் உணவு பொருட்கள் மீதான் ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்கள் மீதான விவாதத்தின் போது திமுக எம்.பிக்கள் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இதையும் படிங்க: 5ஜி வழக்கில் பாஜக மீது குற்றம் சொன்ன திமுகவை திருப்பி அடித்த சீமான்.. டுவிட்டரில் பங்கம் செய்த திமுக MP.

அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், திமுக அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதாகவும் கூறினார். ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சண்டிகரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்ற போது, 56 பொருட்களுக்கு வரி தொடர்பாக பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.

இதையும் படிங்க: 5ஜி மெகா ஊழலில் வகையாக மாட்டிக் கொண்ட மோடி அரசு.. விசாரணையில் இருந்து தப்பவே முடியாது.. அழகிரி.

அந்த 56 பொருட்களுக்கான பரிந்துரைகளையும் ஒரே வாக்கில் ஆம் அல்லது இல்லை என்று தேர்வு செய்ய வேண்டும். அந்த சூழலில் 56 பொருட்களையும் கலந்துரையாடி தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரமில்லை. மேலும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கலந்துரையாடி தேர்வு செய்வதற்கான வழிவகையும் கொடுக்கவில்லை. ஆகையால் மொத்தமாக 56 பொருட்களுக்கும் ஒன்றாக சேர்த்து ஒப்புதல் அளித்தோம் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios