5ஜி வழக்கில் பாஜக மீது குற்றம் சொன்ன திமுகவை திருப்பி அடித்த சீமான்.. டுவிட்டரில் பங்கம் செய்த திமுக MP.
5ஜி ஊழல் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் பதிலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
5ஜி ஊழல் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் பதிலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். "நாம யாருமே எதிர்பார்க்காத ஒரு பதிலை சொல்லுவாரு பாருங்க" என்றும் அவர் சீமானின் பதிலை நக்கல் செய்துள்ளார். ஏற்கனவே சீமான் பாஜகவினர் பி டீம் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் 5ஜி ஊழல் தொடர்பாக கேள்விக்கு அவர் தெரிவித்துள்ள பதில் அதை நிரூபிப்பதாக உள்ளது என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது, வெறும் 7 நாட்களில் ஏலம் முடிக்கப்பட்டது. ஏலம் விடுவதற்கு முன்னரே 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என பாஜக அமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால் இந்த ஏலத்தின் மூலம் 1.5 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது. 4.30 லட்சம் கோடியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏன் இவ்வளவு குறைவாக கிடைத்திருக்கிறது என அத்துறையில் விவரம் தெரிந்த பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: agnipath army: அக்னிபாத் திட்டம்: இந்திய கடற்படையில் சேர 80ஆயிரம் பெண்களுக்கு மேல் விண்ணப்பம்
இந்நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது, 2ஜி அலைக்கற்றையை ஒப்பிடும்போது 10 முதல் 20 மடங்கு அலைக்கற்றை திறன் மதிப்பு உயர்ந்துள்ளது. அப்படியிருக்கும்போது அதிக அளவிற்கு ஏலம் சென்றிருக்க வேண்டும், 1. 50 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது, இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுதொடர்பாக பலரும் பல வகையில் கருத்து கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: 5ஜி மெகா ஊழலில் வகையாக மாட்டிக் கொண்ட மோடி அரசு.. விசாரணையில் இருந்து தப்பவே முடியாது.. அழகிரி.
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 5ஜி ஊழல் குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு, சிரித்தபடியே கருத்தா.? எனக்கேட்ட அவர், பின்னர் பதில் அளித்தார். அதில், இழப்பீடு நேர்ந்திருக்கிறது என்று சொல்லும் பெருமக்கள் இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இழப்பீடு ஏற்படும் வரை என்ன பண்ணிக்கொண்டிருந்தார்கள் என்று நான் கேட்கிறேன்? எட்டு வருட காலம் பாஜக ஆட்சிக்கு பிறகு இரண்டரை லட்சம் கோடி இழப்பு என்று இப்போதுதான் தெரிகிறதா? என செய்தியாளரிடம் திருப்பி கேள்வி எழுப்பினார்.
அதாவது சீமானிடம் பாஜகவின் 5ஜி ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பினால், அவர் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடமே திருப்பி கேள்வி கேட்கிறார், எப்படி கேள்வி கேட்டாலும் கடைசியில் திமுக மீது குற்றம் சொல்லி முடிக்கிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். பல நேரங்களில் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசும் சீமான் பெரும்பாலும் திமுகாவையே குறிவைத்து வைத்து தாக்கி வருகிறார். பாஜகவின் பி டீம் என்று பலரும் அவரை விமர்சித்து வரும் நிலையில், தற்போது அவர் 5ஜி ஊழல் கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் அதை நிரூபிப்பதாக உள்ளது என்று கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சீமானின் கேள்வியைக் கிண்டலடித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். " நம்ம யாருமே எதிர்பார்க்காத ஒரு பதில் சொல்லுவார் பாருங்கககக" என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு பல திமுகவினர் கமெண்ட் செய்து வருகின்றனர்.