Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. தேர்தல் ஆணையம் முடிவு அறிவிப்பதில் சிக்கல்? அதிர்ச்சியில் இபிஎஸ்?

எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

New case in Delhi High Court against Edappadi Palanisamy
Author
First Published Apr 20, 2023, 10:40 AM IST | Last Updated Apr 20, 2023, 10:44 AM IST

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு முடிவுகளையும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வந்தது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், அதிமுக கட்சி விதிகளை மாற்றியதை உடனடியாக ஆணையம் ஏற்க வேண்டும்.. கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- BREAKING: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்.. வேட்பாளரை அறிவித்து இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்..!

New case in Delhi High Court against Edappadi Palanisamy

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் 10 நாட்களில் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனால், தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இபிஎஸ்க்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

இதையும் படிங்க;- தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா..? அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை

 New case in Delhi High Court against Edappadi Palanisamy

அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. ஆகையால், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக்கூடாது. கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளேன். ஆனால் ஆணையத்தின் தரப்பில் தற்போது வரையில் எந்த ஒரு பதிலும் இல்லை.

New case in Delhi High Court against Edappadi Palanisamy

இந்நிலையில், இறுதி உத்தரவு வரும் வரை அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios