BREAKING: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்.. வேட்பாளரை அறிவித்து இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்..!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் இபிஎஸ் நேற்று வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் இபிஎஸ் நேற்று வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டி..! வேட்பாளரை அறிவித்த எடப்பாடி
இந்நிலையில், பாஜக கூட்டணி இடம் பெற்றிருந்த அதிமுக பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுகவில் இணைந்த பாஜக மாநில முக்கிய நிர்வாகி..! அண்ணாமலைக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- 10-05-2023 அன்று நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக 159 - புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் M. நெடுஞ்செழியன் அவர்கள் கர்நாடக மாநில மாணவர் அணிச் செயலாளர் நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.