பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமைத் தாக்கினர். நமது வீரர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்களை அழித்தனர். இது ஒரு புதிய இந்தியா.
பாகிஸ்தானின் போலித்தனத்தை ஜெய்ஷ் பயங்கரவாதிகள் அம்பலப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் தாரிலுள்ள 'பிஎம் மித்ரா பூங்காவை' திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ‘‘பயங்கரவாதம் மீதான பாகிஸ்தானின் போலித்தனம் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை, ஜெய்ஷ்-இ-முகமது தளபதியே பாகிஸ்தானின் இருண்ட செயல்களை அம்பலப்படுத்தி உள்ளார். 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இந்தியாவின் துல்லியமான தாக்குதலில் பஹாவல்பூரில் பயங்கரவாதத் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக பயங்கரவாதியே ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தானை எப்படி ஜெய்ஷ் பயங்கரவாதிகள் அம்பலப்படுத்தினார்கள் என்பதை இன்று உலகம் முழுவதும் பார்த்தது.இந்தியத் தாக்குதலில் அவரது தளங்கள் அழிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமைத் தாக்கினர். நமது வீரர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்களை அழித்தனர். இது ஒரு புதிய இந்தியா. எந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கும் இது பயப்படவில்லை. நிதி நடவடிக்கை பணிக்குழு மற்றும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளுக்கு முன் பாகிஸ்தான் மறுத்த போதிலும், பஹாவல்பூர் ஜெய்ஷ்-இ-முகமது நடவடிக்கைகளின் மையமாக உள்ளது என்ற இந்தியாவின் கருத்தை இந்த ஒப்புதல் உறுதிப்படுத்துகிறது.
தேசத்தை விட எனக்கு எதுவும் முக்கியம் இல்லை. வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையுடன் "நாட்டிற்காக அனைத்தையும் அர்ப்பணித்த" நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் பெண்கள் சக்தி, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளைச் சார்ந்தது’’ என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
