- Home
- Politics
- ‘போதும் நிறுத்துங்க.. திரும்பத் திரும்ப தப்பு செய்யுறீங்க...’ கடுமையாக எச்சரித்த அமித் ஷா ..! திமிறிய இபிஎஸ் .!
‘போதும் நிறுத்துங்க.. திரும்பத் திரும்ப தப்பு செய்யுறீங்க...’ கடுமையாக எச்சரித்த அமித் ஷா ..! திமிறிய இபிஎஸ் .!
அமித் ஷாவின் சமரசம் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. எடப்பாடி பழனிசாமியோ இந்த அணிகள் இணைப்பு பற்றி பற்றி பேச வேண்டாம். வேறு விஷயங்கள் இருந்தால் பேசலாம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்றைய தினம் நடைபெற்ற அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் என்ன நடந்தது என்று குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் ஆங்கில ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, ‘‘அதிமுகவில் அணிகள் இணைப்பு சம்பந்தமாக அந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘‘அதிமுகவில் இருந்து பிரிந்து செயல்படும் டிடிவி. தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டால் அதிமுக வலிமையாக இருக்கும். அதிமுக மீண்டும் பழைய வலிமையோடு தேர்தலை சந்தித்தால் தான் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் தென்மாவட்டங்களில் வெற்றி பெறுவது கடினம்.
எனவே கடந்த 2021ல் இதனை வலியுறுத்தி இருந்தேன். எல்லோரையும் இணைத்திருந்தால் சாதகமாக அமைந்திருக்கும். 2021- ல் நீங்கள் டிடிவி. தினகரன் உள்ளிட்டோரை சேர்த்துக் கொள்ளும் மாட்டேன் என்று சொன்ன காரணத்தினால் தான் ஆட்சியை கோட்டை விட்டோம். அதே தவறை 2026லும் செய்ய வேண்டாம். பிரிந்து சென்றவர்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
அமித் ஷாவியின் இந்த பேச்சை விரும்பாத எடப்பாடி பழனி சாமி, ‘ ‘என்னைப் பொறுத்தவரை அதற்கான வாய்ப்பே கிடையாது. அணிகள் இணைப்பு என்பது சாத்தியமே கிடையாது. அவர்கள் எங்களது கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள். கட்சியை அழிக்க வேண்டும், இரட்டை இலையை முடக்க வேண்டும். எங்களது சின்னத்துக்கு எதிராகவே போட்டி போட்டு எங்களை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது முடியாத காரியம். அதைத்தான் நான் சென்னையிலும் பேசிவிட்டு வந்திருக்கிறேன்’’ என இபிஎஸ் பிடிவாதமாக தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே அமித் ஷாவின் சமரசம் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. எடப்பாடி பழனிசாமியோ இந்த அணிகள் இணைப்பு பற்றி பற்றி பேச வேண்டாம். வேறு விஷயங்கள் இருந்தால் பேசலாம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், 2026 இடையே உள்ள வேறுபாடுகள் சச்சரவுகள் தடையாக இருக்கிறது. அவற்றை சரி செய்வது எப்படி என்று பேசி ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.