Asianet News TamilAsianet News Tamil

காங்கிரசில் சீமான் இணையட்டும் ... அப்புறம் பேசட்டும்....! எகிறி அடித்த நாரயணசாமி

திமுக மற்றும் காங்கிரசை சாடுவதை தவிர அண்ணாமலைக்கு வேறு வேலை கிடையாது. வடமாநிலங்களை வேண்டுமானால் மோடியும், அண்ணாமலையும் ஏமாற்றலாம். ஆனால் தென்மாநில மக்களை பாஜகவால் ஏமாற்ற முடியாது என நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
 

Narayanasamy has criticized that the BJP cannot deceive the southern states
Author
First Published Sep 11, 2022, 8:56 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம்

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி, மத்திய பாஜக அரசு மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மதக்கலவரம் உருவாக்கி அரசியல் லாபம் பெற நினைக்கிறது.மோடி ஆட்சியில் 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் சென்றுவிட்டனர். பணக்காரர்களுக்காக மோடி ஆட்சி செய்கிறார். கொடுத்த வாக்குறுதி படி 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் வெறும்16 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை உள்ளது. இந்திய நாட்டின் அந்நியச் செலாவணி குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளோடு நல்ல உறவில்லாத நிலையை மோடி அரசு உருவாக்கி உள்ளது. 2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும். பாஜக அரசு எந்த மாநிலங்களிலும் நேர்மையாக ஆட்சிக்கு வருவதில்லை. மணிப்பூர், மேகலாயா, கர்நாடகா, புதுச்சேரியில் கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது, பல ஆயிரம் கோடிகளை கொடுத்து ஆட்சியை கலைப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்களை பாஜக மேற்கொண்டது. ஜனநாயக படுகொலையை பாஜக செய்கிறது.

கடந்த ஆட்சியில் போராட்டம்.. இப்போது மின் கட்டண உயர்வு.. இதுதான் விடியல் ஆட்சியா? சீமான் ஆவேசம்!

Narayanasamy has criticized that the BJP cannot deceive the southern states

தென் மாநிலங்களை ஏமாற்ற முடியாது

ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது திட்டமிட்டு குறிவைத்து வருமானவரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ ஏவி சோதனை நடத்துகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ராகுல்காந்தியின் பாதயாத்திரை இந்திய மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய மாற்றத்தை தரும். அண்ணாமலை முழுநேர அரசியல்வாதி கிடையாது. என்ன வளர்ச்சிப்பாதையில் நாடு சென்றுள்ளது. ஏற்கனவே இருந்த திட்டங்களை மோடி மாற்றியமைத்துள்ளார். இந்திய நாட்டிற்கு அனைத்தையும் செய்தது காங்கிரஸ் கட்சி தான். திமுக காங்கிரசை சாடுவதை தவிர அண்ணாமலைக்கு வேறு வேலை கிடையாது. வடமாநிலங்களை வேண்டுமானால் மோடியும், அண்ணாமலையும் ஏமாற்றலாம். ஆனால் தென்மாநிலங்களை, மக்களை பாஜகவால் ஏமாற்ற முடியாது.

இந்தியாவிலேயே நம்பர் 1 அமைச்சர்.. நோட்டா கூட போட்டி போடும் பாஜக.. முற்றும் பாஜக Vs திமுக மோதல்!

Narayanasamy has criticized that the BJP cannot deceive the southern states
சீமான் காங்கிரசில் சேரட்டும்

ராகுல் தலைமை பொறுப்பை ஏற்க மாட்டேன் என சொல்லவில்லை. தேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம். ராகுல்காந்தி தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தான். சீமான் இல்லை. சீமான் எங்கள் கட்சியில் வேண்டுமானால் சேர்ந்துவிட்டு பேசட்டும். மோடி இத்தாலி, அமெரிக்காவில் லண்டனில் இருந்து வரும் உடைகளை போடுகிறார். எங்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி யோக்கிதை பாஜகவுக்கு உள்ளது என விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

பிரம்மாண்ட பொருட்செலவில் நிகழ்ச்சி நடத்தும் திமுக..! குடிசையில் வாழும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை- சசிகலா

Follow Us:
Download App:
  • android
  • ios