MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவில் இணைகிறார் தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம்..! கலகலக்கும் அரசியல் களம்

திமுகவில் இணைகிறார் தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம்..! கலகலக்கும் அரசியல் களம்

O panneerselVam: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 27 2026, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
திமுகவில் பன்னீர்செல்வம்..?
Image Credit : Asianet News

திமுகவில் பன்னீர்செல்வம்..?

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம் 1970ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறை சட்டமன்ற உறுப்பினரானார். மே மாதம் சட்டமன்ற உறுப்பினரான நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வராகவும் பொறுப்பேற்றார்.

26
3 முறை முதல்வர்
Image Credit : Asianet News

3 முறை முதல்வர்

2001 - 2002: உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஜெயலலிதா பதவி விலக நேரிட்டபோது, முதன்முதலாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர மறுத்து, ஒரு சாதாரண இருக்கையில் அமர்ந்து ஆட்சி நடத்தியது பெரும் பேசுபொருளானது.

2014 - 2015: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது, மீண்டும் முதலமைச்சரானார்.

2016 - 2017: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது அவசரச் சட்டம் கொண்டு வந்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

Related Articles

Related image1
எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா..? அருமை அண்ணன் இபிஎஸ்..! ஓ.பன்னீர்செல்வம் பளீர் பேட்டி
Related image2
Now Playing
பிரதமரிடம் தான் பேச வேண்டும் என்று நயினார் அனுப்பிய குறுஞ்செய்தியை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம் !
36
ஜல்லிக்கட்டு நாயகன்
Image Credit : Asianet News

ஜல்லிக்கட்டு நாயகன்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தபோது, அப்போதைய முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடனடியாக டெல்லி சென்றார். 2017 ஜனவரி 19 அன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் தரப்பில் சட்ட ரீதியான தடைகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், தமிழகத்தின் உணர்வுகளை அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 21, 2017 அன்று தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டப் பூர்வத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது.

46
பூகம்பத்தை கிளப்பிய தர்மயுத்தம்
Image Credit : Asianet News

பூகம்பத்தை கிளப்பிய தர்மயுத்தம்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா தரப்புடன் நிகழ்ந்த மோதல் காரணமாக பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சுமார் 40 நிமிடங்கள் தியானம் செய்து தர்ம யுத்தத்தைத் தொடங்கினார். பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சில சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் பாஜகவின் தலையீட்டில் அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டு துணைமுதல்வராக்கப்பட்டார். மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார்.

56
அதிமுக ஒற்றை தலைமை
Image Credit : our own

அதிமுக ஒற்றை தலைமை

2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் பன்னீர், பழனிசாமி இடையேயான அதிகார மோதல் கட்சியின் பல முன்னணி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பை கட்சியில் இருந்து நீக்க கட்சியின் பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

66
திமுகவில் பன்னீர்..
Image Credit : x/ mk stalin

திமுகவில் பன்னீர்..

அதிமுகவில் சேர தொடர்ந்து பல்வேறு வகைகளில் விருப்பம் தெரிவித்த பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை பொதுச்செயலாளர் பழனிசாமி கடைசி வரை ஏற்கவில்லை. இறுதியில் வேறு வழி இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
அதிமுக பாஜக கூட்டணி
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்லகண்ணு ஐயா தான் உதாரணம் ! பிரேமலதா பேட்டி
Recommended image2
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Recommended image3
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Related Stories
Recommended image1
எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா..? அருமை அண்ணன் இபிஎஸ்..! ஓ.பன்னீர்செல்வம் பளீர் பேட்டி
Recommended image2
Now Playing
பிரதமரிடம் தான் பேச வேண்டும் என்று நயினார் அனுப்பிய குறுஞ்செய்தியை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved