எட்டுவழிச்சாலை விவகாரத்தில் திமுக புளுகுகிறது… கடுமையாக விமர்சித்த நாராயணன் திருப்பதி!!

எட்டுவழிச்சாலை விவகாரத்தில் திமுக புளுகி வருவதாக பாஜகவின் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

narayanan tirupati slams dmk statement regarding eight lanes scheme

எட்டுவழிச்சாலை விவகாரத்தில் திமுக புளுகி வருவதாக பாஜகவின் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார். 8 வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை என்று கூறியதாக அமைச்சர் எ.வ.வேலு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். இதனை விமர்சித்துள்ள பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி, 8 வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்த போது மக்கள் நல திட்டங்களையும், கட்டமைப்புகளை பெருக்கும் திட்டங்களையும் தொடர்ந்து எதிர்த்ததோடு, சில தீய சக்திகள் செய்த பல்வேறு கலகங்களுக்கு தன் ஆதரவையும் அளித்தது திராவிட முன்னேற்ற கழகம். மேலும், எதிர்க்கட்சியாக இருந்த போது, சேலம் எட்டுவழிச்சாலை விவகாரத்தில் மீண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது என்று 31/05/2019 அன்று மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மையா இல்லையா?

இதையும் படிங்க: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு… ஆய்வு செய்ய பாமக சார்பில் குழு!!

தேர்தல் வரை, பயத்தின் காரணமாக திட்டம் செயல்படுத்தப்படாது என்று பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல மீண்டும் எட்டு வழி சாலை பற்றி பழனிச்சாமி பிதற்ற ஆரம்பித்து விட்டார் என்று டி.ஆர்.பாலு, 13/07/2019 அன்று சொன்னது உண்மையா இல்லையா? மக்களின் நலனுக்காக எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய மாநில அரசு உடனே கைவிட வேண்டும் என்று 06/06/2020 அன்று முகஸ்டாலின் சொன்னது உண்மையா இல்லையா? திமுக ஆட்சி அமைந்த பின் 17/06/2021 அன்று இந்திய பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய சுருக்க உள்ளடக்க குறிப்பின் 15(e)ன் படி, சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்தி வெளியீடு எண்: 292ல் குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா?

இதையும் படிங்க: "மாமனாரை கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சியை பிடிக்க போகிறார் ".. திமுக கோட்டையில் வெடி வைத்த ஜெயக்குமார்.

சேலம் எட்டு வழி சாலை என்பது மிக அவசியமான ஒன்று என்பதை நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எதிர்க்கட்சியாக இருந்த போது, அரசியல் லாபத்திற்காக வேண்டுமென்றே மக்களை தூண்டிவிட்டு, சில தீய சக்திகளுக்கு துணை நின்று இந்த திட்டத்தை எதிர்த்த திராவிட முன்னேற்ற கழகம், இன்று ஆட்சியில் அமர்ந்த பின் கட்டமைப்பை பெருக்க வேண்டுமானால், பொருளாதார வளர்ச்சி வேண்டுமானால், தொழில்துறையில் முன்னேற்றம் வேண்டுமானால், வேலை வாய்ப்பை பெருக்க வேண்டுமானால் எட்டு வழிச்சாலை அவசியம் என்பதை தற்போது உணர்ந்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போது, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்று அடுக்கி கொண்டேயிருந்த திமுக, இப்போது 8 வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை என்று சொல்வதற்கு பெயர் திராவிட மாடல் புளுகா? என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios