எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது பிடிஆரின் விளக்கம்.. நாராயணன் திருப்பதி விமர்சனம்!!
தான் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்த நிலையில் அதனை தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.
தான் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்த நிலையில் அதனை தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். தான் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று விளக்கம் அளித்திருந்தார். அதில் அந்த ஆடியோ போலியானது என்று தெரிவித்திருந்தார். இதனை விமர்சனம் செய்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருப்பது விந்தையாக உள்ளது. வழக்கத்திற்கு மாறாக உள்ளது.
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தலில் இவர்களுடன் தான் கூட்டணி? அன்புமணி ராமதாஸ் கூறுவது என்ன?
யார் அவர் மீது விமர்சனங்கள் வைத்தாலும் அதற்கு பதிலடி கொடுத்து அவர்களை தரக்குறைவாக விமர்சித்து அவர்களை வம்புக்கு இழுத்து அவர்கள் மீது வழக்கு தொடுக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதல்வரின் மகனையும் மருமகனையும் குறித்து பேசிய அந்த ஆடியோக்களை வெளியிட்டவர்கள் மீது நான் வழக்கு தொடர மாட்டேன் என்று சொல்லியிருப்பதும், நான் இதை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று சொல்லாமல் இருப்பதும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வதை போல் தான் இருக்கிறது. இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல மிக அமைதியாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: இது எங்க குடும்பத்துக்கு போதாத காலம்! பிரியங்கா காந்தி கவலை
ஆனால் ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியும் இந்த ஆடியோக்களில் பேசியிருப்பது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் என்று. என்ன செய்வது பாவம் அவரையும் மிரட்டியிருக்கிறார்கள். தமிழகத்தில் ஊடகங்களை மிரட்டி இதுக்குறித்து விவாதங்களை செய்யாமல் இருப்பதற்காக திமுக அரசு மிரட்டிக்கொண்டிருக்கக் கூடிய வேலையிலே இன்றைக்கு திரை, கதை, வசனம் எழுதி அதனை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விட்டு படிக்க சொல்லியிருப்பது உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் பல்வேறு ஆதாரங்களோடு பல ஆடியோக்கள் வந்தாலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மறுத்துக்கொண்டே இருப்பார். ஆதரங்கள் வெளிவந்துக்கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.