2 நாளில் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவார்.? நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவல்
அதிமுக கூட்டணியை பாஜக மேலிடம் விரும்பும் நிலையில், அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற அண்ணாமலையை ஏற்க எடப்பாடி தரப்பு தயாராக இல்லையென நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்
தமிழக பாஜகவிற்கும்- அதிமுகவிற்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஈரோடு தேர்தலின் போது தங்கள் அணிக்கு ஆதரவு தர வேண்டும் என அதிமுக மூத்த தலைவர்கள் பாஜக அலுவலத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு கேட்டனர். இருந்த போதும் கடைசி நேரம் வரை இழுத்தடித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்தநிலையில் பாஜக ஐடி பிரிவு நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து விட்டு அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணமாலை, கட்சியில் இருந்து பழையவர்கள் போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவாகுவார்கள் என தெரிவித்தார்.
இட்லி சுட வரவில்லை
மேலும் திராவிட கட்சிகளை சார்ந்து தான் பா.ஜ.க. வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா, கருணாநிதி போல் முடிவு எடுப்பேன் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையில் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், அண்ணாமலை அடாவடித்தனமாகப் பேசி வருகிறார், அழிவின் விளிம்பை நோக்கிச் அண்ணாமலை சென்று கொண்டிருக்கிறார், அதைதான் அவருடைய பேச்சு உணர்த்துகிறது.
2 நாளில் தலைவர் மாற்றம்
எந்த தலைவரும் தன்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வதில்லை. அவரை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து பாஜகவிற்குள்ளேயே எழுந்துள்ளதாகவும் கூறினார். அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற அவரை ஏற்க எடப்பாடி தரப்பு தயாராக இல்லையென தெரிவித்தவர், 2 நாளில் பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க வாய்ப்பில்லையென கூறினார். அதிமுகவுடனான கூட்டணியை டெல்லி விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
Annamalai: நான் தோசை இட்லி சட வரவில்லை! ஜெயலலிதா போல தலைவராக வந்தேன்! அண்ணாமலை பேச்சு