Annamalai: நான் தோசை இட்லி சட வரவில்லை! ஜெயலலிதா போல தலைவராக வந்தேன்! அண்ணாமலை பேச்சு
தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை; தலைவராக வந்து உள்ளேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. தலைவராக வந்துள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுபோலவே என் முடிவும் இருக்கும் எனக் கூறினார்.
மேலும், "தலைவர்கள் முடிவு எடுத்தால் நான்கு பேர் கோபித்துக்கொண்டு வெளியேருவார்கள். நானும் அந்த மாதிரி தலைவர்தான். பாஜகவில் மேனேஜராக இல்லை. கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுப்பேன். வரும் காலத்தில் வேகம் அதிகமாகவே இருக்கும். குறையப்போவதில்லை" எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
முதல்வரை நன்றாக தூங்கவிடுங்கள். சரியாக தூங்காததால் முதல்வர் பிதற்றல்களை பேசுகிறார். நன்றாக தூங்கினால் தெளிவாக பேச முடியும். ஒய்வு இல்லாமல் உள்ளார். தமிழக அரசியலில் ஜாதிகளை கலந்த ஒரே கட்சி திமுக தான். பிரிவினையை கொண்டு வந்த பெருமையும் திமுகவிற்கு தான். இந்தியாவில் வடக்கு, தெற்கு, தமிழகத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, கொங்கு என கொண்டு வந்தது திமுக தலைவர். கேள்வி கேட்கிறோம் தவறு செய்ய கூடாது என்று தான். சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோரை கொன்றது பிரதமர் என பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் சொன்னார். அவரை கேபினட் மந்திரியா போட்டு தமிழ்நாட்டு அமைதியாக இருக்கு என்றால் என் மீது எப்.ஐ.ஆர். போடுகின்றனர். கமல் நடித்த படத்தில் எதை பார்த்தாலும் பயன் என்பது போல் முதல்வருக்கு இருந்தால் நான் என்ன செய்ய முடியும்.
அடுப்பு கரியை பார்த்தால் அண்ட கரிக்கு பொறாமை வந்து விடும். தேஜ்ஸ்வி யாதவ் முதல்வரின் பேரன் வயது. அவர் தந்தையின் தயவுடன் பிகாரின் துணை முதல்வராக உள்ளார். பேரன் வயதில் உள்ள துணை முதல்வரின் சான்று வாங்குவது முதல்வர் பெருமை படுவது அவரது அரசியல் தாழ்ந்து போய் உள்ளது என்பதை காட்டுகிறது. தேசிய அரசியல் என்றால் கே.சி.ஆர்., மம்தா, நிதிஷ்குமார், அரவிந்த் ஜெக்ரிவால் வந்து இருக்க வேண்டும். சினிமாவில் ஹீரோ பின்னால் 2ம் தர ஹீரோக்கள் பேசுவது போல் இருந்தது. இதை பார்த்து பா.ஜ.க. பயப்பட போகிறதா. மோடி ஆட்சியில் யாரை பார்த்தும் எங்கு பயம் இல்லை. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் காலத்தில் எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்து இருந்தார்கள். குழந்தைகளை அழைத்து வந்து பேசுவது தமிழக மக்களை அசிங்கப்படுத்துவதாக உள்ளது.
Li Qiang: விசுவாசமான லி கியாங்கை பிரதமராக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிக்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் 2 முதல்வர்களும் மக்களை ஏமாற்று கின்றனர்.2024ம் ஆண்டு தேர்தலுக்காக தமிழக முதல்வரும் கேரள முதல்வரும் இணைந்து சதி திட்டம் திட்டுவது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. தமிழகத்தை பற்றியோ கேரளாவை பற்றியோ கவலை கிடையாது. இந்திய அரசியலில் எம்.பிக்கள் கிடைத்தால் டெல்லி சென்று பேரம் பேசலாம் என்பதற்காக இணைந்து உள்ளனர். அதுப்போல் தான் வைகோவும்.
கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவார்கள்.
திராவிட கட்சிகளை சார்ந்து தான் பா.ஜ.க. வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. இது பா.ஜ.க.வின் வளர்ச்சியை காட்டுகிறது. யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை உள்ளவர்கள் இருப்பார்கள்.
பா.ஜ.க.வில் இருந்து சேர்த்து தான் பெரிய கட்சி என காட்ட வேண்டுமா அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி வந்து விட்டதா என மக்கள் நினைக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும்.
Meta layoffs: மெட்டாவின் மெகா ஆள் குறைப்பு திட்டம்! ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைக்கு வேட்டு!