Virupakshappa: லஞ்ச வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ விருபாக்‌ஷப்பா கட்சியில் இருந்து நீக்கம்

மோசடி வழக்கில் சிக்கிய கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ மடல் விருபக்‌ஷப்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Karnataka MLA Madal Virupakshappa removed from the BJP

லஞ்சம் ஊழல் வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக எம்.எல்.ஏ. மடால் விருபாக்‌ஷப்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மாநில ஒழுங்குக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பாஜக தலைமை விருபாக்‌ஷப்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளது.

அண்மையில் பாஜக எம்எல்ஏ மடல் விருபக்‌ஷப்பா ரூ. 8.12 கோடி மோசடி வழக்கில் சிக்கினார். இது தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. 5 லட்சம் பிணைப்பத்திரத்தின் மீது இந்த ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

Waste to Wealth: எல்லோரும் இவங்கள மாதிரி செய்யலாம்! தந்தை - மகனைப் பாராட்டிய பிரதமர் மோடி!

இதனிடையே, லோக் ஆயுக்தா முன்பு எம்எல்ஏ 48 மணி நேரத்திற்குள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இவரது மகன் பிரசாந்தை, லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு மார்ச் 3ஆம் தேதி கைது செய்தது. இதையடுத்து எம்எல்ஏ வீட்டில் நடந்த சோதனையில் எட்டு கோடி ரூபாய் பணம் சிக்கியது.

Karnataka MLA Madal Virupakshappa removed from the BJP

இதனால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால் எம்எல்ஏ விருபாக்‌ஷப்பா உடனே தலைமறைவாகிவிட்டார். மறுபுறம், எம்எல்ஏ மடல் விருபக்ஷா குறித்து செய்தி வெளியிட்டதற்காக, சுவர்ணா நியூஸ் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மடல் விருபக்‌ஷப்பா. சன்னகிரி தொகுதியில் இருந்து 2008ல் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2013 சட்டமன்றத் தேர்தலில் வாட்டாள் ராஜண்ணாவிடம் தோல்வியடைந்தார். ஆனால் 2018ல் மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏடிஆர் தரவுகளின்படி, 2018 தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது மடல் விருபக்‌ஷப்பாவுக்கு ரூ.5.73 கோடி சொத்து இருந்தது.

Annamalai: நான் தோசை இட்லி சட வரவில்லை! ஜெயலலிதா போல தலைவராக வந்தேன்! அண்ணாமலை பேச்சு

Karnataka MLA Madal Virupakshappa removed from the BJP

58 வயதான விருபக்‌ஷப்பா கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் தலைவராக இருந்தார். அந்தப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிறுவனம்தான் புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பை உற்பத்தி செய்கிறது. வெள்ளிக்கிழமை மகன் பிரசாந்த் தொடர்பான ஊழல் செய்தி வெளியானதும் விருபக்‌ஷப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

எம்எல்ஏவின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து ரூ.8.12 கோடி சிக்கியது. லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு, மார்ச் 2, வியாழக்கிழமை, பாஜக எம்எல்ஏ மடல் விருபக்ஷா வீட்டில் இருந்து ரூ.6 கோடி ரொக்கத்தையும், அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.1.75 கோடியையும் மீட்டது. முன்னதாக அவரது மகன் பிரசாந்த் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். அதன் பின்னர் எம்எல்ஏ தலைமறைவாக இருந்ததால், தனக்கு முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரைத் தேடி ஊழல் தடுப்புப் பிரிவினர் பல இடங்களில் சோதனை நடத்தினர்.

பீகார் முதல்வரை சந்தித்த டி.ஆர் பாலு… வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி குறித்து விளக்கம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios